search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு வேலை வாங்கி தருவதாக கூறிரூ.11 லட்சம்  மோசடி செய்த சேலம் வாலிபர்
    X

    அரசு வேலை வாங்கி தருவதாக கூறிரூ.11 லட்சம் மோசடி செய்த சேலம் வாலிபர்

    • கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.
    • சென்னை விமான நிலையத்தில் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் உள்ளார் என்றும் அவர் மூலம் உங்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம்  பெற்றுள்ளார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள மிளகாய்காரனுர் பகுதியை சேர்ந்த துரை என்பவரின் மகன் பிரகாஷ்ராஜ் (வயது 30). எம்.பி.ஏ. பட்டதாரி.

    பட்டதாரி பெண்

    இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு

    பிரபல தனியார் கம்பெ னியில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். மேலும் மல்டிலெவல் வியாபாரம் என ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் பின்னர் பணம் இரட்டிப்பு ஆகி கிடைக்கும் என்றும், இந்த தொழிலில் சங்கிலி தொடர் போல் தனக்கு கீழ் ஆட்களை சேர்த்து விடு வதும் ேபான்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

    அப்போது செல்போன் மூலம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரி சோபா (21) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இவரிடம் பிர காஷ்ராஜ், சென்னை விமான நிலையத்தில் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் உள்ளார் என்றும் அவர் மூலம் உங்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் பெற்றுள்ளார்.

    அதேபோல் சோபாவின் நண்பர் கும்மிடிபூண்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் (23) என்பவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 4 லட்சம் வாங்கி கொண்டு தனது சொந்த ஊரான மிளகாய்காரனுர் பகுதிக்கு வந்து விட்டார். அவர்களுக்கு அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் தனது செல்போனை ஆப் செய்து கொண்டார்.

    தாக்குதல்

    இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த சோபா, சக்திவேல் ஆகியோர் நேற்று தாரமங்கலத்தில் உள்ள பிரகாஷ்ராஜ் வீட்டுக்கு வந்து தங்களது பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் பிரகாஷ்ராஜ் வாக்குவாதம் செய்து, 2 பேரையும் அடித்து, உதைத்து கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது பற்றி சோபா, தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பிரகாஷ்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த பிரகாஷ்ராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார், தேடி வருகின்றனர்.

    Next Story
    ×