search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்கன்றுகள் நடும் விழா
    X

    மரக்கன்றுகள் நடும் விழா

    • 20 வகையான 300 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கோவிலூர் ஊராட்சி சென்றாயன அள்ளி ஏரிகரை பகுதியில் நடப்படுகிறது.
    • மூன்று ஆண்டுகளில் இவ்விடம் முழுவதும் பறவைகளின் வாழ்விடமாக மாற்றப்படும்.

    தொப்பூர்,

    உலகம் முழுவதும் காடுகள் மற்றும் மரங்களின் அளவு குறைந்து கொண்டே வருவதால் கோடை காலத்தில் வெப்பம் அதிகரிப்பதால் காடுகளில் உள்ள வனவிலங்குகள் முதல் பறவைகள் வரை அனைத்தும் தங்களுக்கான வாழ்விடம் தண்ணீர் உணவு உள்ளிட்டவற்றை தேடும் அவலம் நீடித்து வருகிறது.

    அவற்றை நிவர்த்தி செய்யும் விதமாக பல்வேறு தொண்டு நிறுவனங்கள் முதல் சமூக தன்னார்வல அமைப்புக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறை மரங்களை வளர்த்தெடுக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம், கோவிலூர் ஊராட்சி சென்றாயனஅள்ளி ஏரிகரை பகுதியில் உலக வன நாள் விழாவை முன்னிட்டு பெரியாம்பட்டி ஸ்ரீ ஞானாம்பிகா கல்வி அறக்கட்டளையின் சார்பாக மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஸ்ரீ ஞானாம்பிகா கல்வி அறக்கட்டளையின் லட்சுமிமதி கூறும்போது:-

    உலக வன தினத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவில் சாதாரணமாக நிழல் தரும் மரங்கள் அனைத்து இடங்களில் நடப்படுகின்றன.

    தற்போதைய சூழ்நிலையில் பறவைகள் தான் அதிக அளவில் தங்கள் வாழ்விடம் உணவு தேவை உள்ளிட்ட வற்றில் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

    அவற்றை மீட்கும் விதமாக பறவைகளுக்கு பலன் தர கூடிய ஆலமரம், அரசன், அத்தி, வேப்பமரம், நொச்சி, புங்கன், உச்சி, இலுப்பை உள்ளிட்ட 20 வகையான 300 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கோவிலூர் ஊராட்சி சென்றாயன அள்ளி ஏரிகரை பகுதியில் நடப்படுகிறது. மேலும் ஏரி கரையில் நடப்பட்டு ஊராட்சி நிர்வாகத்தின் தொடர் கண்காணிப்பில் அனைத்து மரக்கன்றுகளும் வளர்த்தெடுக்கபடும் அடுத்த மூன்று ஆண்டுகளில் இவ்விடம் முழுவதும் பறவைகளின் வாழ்விடமாக மாற்றப்படும் என தெரிவித்தனர்.

    விழாவில் கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவி தமிழ் செல்வி நந்திசிவன் கலந்து கொண்டார். மேலும் ஊராட்சி நிர்வாகத்துடன் சேர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைவாணி மற்றும் ரவி தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். மேலும் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் லட்சுமிமதி, நாகராஜ், முனுசாமி, சங்கர், வேல்முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×