என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணை கேனுடன் வந்த பெண்
- 4 ரோடு கல்லாங்குத்து புதூர் பகுதியில் 250 சதுர அடி நிலப்பரப்பில் வீடு கட்டுவதற்காக ௫ தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.5.93 லட்சம் கடனாக பெற்றேன்.
- வாங்கிய கடனுக்கு இது வரை 5 லட்சம் ரூபாய் வரை கட்டி விட்டேன்
சேலம்
சேலம் 4 ரோடு அருகே உள்ள கல்லாங்குத்து புதூர் பகுதியை சேர்ந்தவர் கமலா (வயது 45). இவர் கணவர் அறிவுமணி மற்றும் மகளுடன் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கமலா மறைத்து வைத்து கொண்டு வந்த மண்எண்ணை கேனை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கமலா நிருபர்களிடம் கூறிய தாவது:-
4 ரோடு கல்லாங்குத்து புதூர் பகுதியில் 250 சதுர அடி நிலப்பரப்பில் வீடு கட்டுவதற்காக 5 ரோடு பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.5.93 லட்சம் கடனாக பெற்றேன். வாங்கிய கடனுக்கு இது வரை 5 லட்சம் ரூபாய் வரை கட்டி விட்டேன்.மேலும் ரூ. 7.20 லட்சம் இன்னும் கட்ட வேண்டும் என கூறுகிறார்கள். மேலும் கடனை கட்டு மாறு அடியாட்களை வைத்து கொலை மிரட்டலும் விடுக்கிறார்கள். இதனால் என் வீடு பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து விசாரித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






