என் மலர்
உள்ளூர் செய்திகள்

முன்னாள் மாணவர் மன்ற விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய உத்தரவு
- பெரும்பாலான பள்ளி களில் தலைமை ஆசிரியர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.
- முன்னாள் மாணவர்களில் குறைந்தபட்சம் 25 பேரை மன்றத்தில் இணைக்க வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி, அரசு உயர் நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஏராளமான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
2 ஆண்டுகளாக...
தமிழகத்தில் 2 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் மன்றம் அமைக்கவும், அதன்மூலம் பல்வேறு பள்ளி வளர்ச்சி பணிகளை மேற்ெகாள்ள வும் அறிவுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், பெரும்பாலான பள்ளி களில் தலைமை ஆசிரியர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.
இவற்றை முழுமையாக செயல்படுத்துவது குறித்து கடந்த மே மாதத்தில் தலைமை ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது.
இந்த நிலையில் ஒருங்கிணைந்த கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நீண்ட காலமாக பணிபுரியும் ஆசிரியர், தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண் குழு உறுப்பி னர்கள் உள்ளிட்டோர் மூலம் ஆர்வம் கொண்ட முன்னாள் மாணவர்களில் குறைந்தபட்சம் 25 பேரை மன்றத்தில் இணைக்க வேண்டும்.
வருகிற ஜூலை மாதம் 20-ந்தேதிக்குள் முன்னாள் மாணவர் மன்றம் அமைத்து அதன் உறுப்பினர்களின் தகவல்களை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
வளர்ச்சி பணி
கல்வி தகுதியை கருத்தில் கொள்ளாமல் பள்ளியில் படித்திருந்து வளர்ச்சி பணிகளில் ஆர்வம் காட்டும் அனைவரையும் சேர்க்கலாம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






