என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
- விவசாயிகள் பல்வேறு வகையான விளை பொருட்களை சந்தைப்படுத்துவது வழக்கம்.
- ஒரு நாள் சந்தை அமைக்கப்பட்டு இருந்தது பிரதம மந்திரி குடியிருப்புத் திட்ட பயனாளிகள்
சேலம்:
மாதந்தோறும் சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் தினத்தில் விற்பனைக்காகவும் விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையிலும் விவசாயிகள் பல்வேறு வகையான விளை பொருட்களை சந்தைப்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தையொட்டி இன்று காலை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு நாள் சந்தை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சந்தையில் மரக்கன்றுகள், செக்கு எண்ணெய் சிறு தானிய பண்டங்கள் உள்ளிட்ட ஏராளமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் காய்கறி அங்காடியில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக கடந்த பல நாட்களாக தக்காளி தட்டுப்பாடு நிலவும் சூழலில், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கடையில் தக்காளி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. தக்காளி வரத்து குறைவாக உள்ள காரணத்தால் வெளி சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நேரடி விற்பனையில் ஈடுபட்டதால் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டதால் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தக்காளியை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.






