என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்
- பெரமனூர் மரம் ஒன்று கீழே விழுந்ததால் போக்குவரத்து நெரிசல்
- இளையராஜா ஆட்டோவில் இருந்து இறங்கி பின்னால் மோட்டார் சைக்கிளில் நின்றிருந்த 2 வாலிபர்களை பின்னோக்கிச் செல்ல அறிவுறுத்தி இருக்கிறார்
சேலம்:
சேலம் மெய்யனூர் ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (41). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு வேலைக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் சேலம் 4 ரோடு பகுதியில் இருந்து பெரமனூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது மரம் ஒன்று கீழே விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது இளையராஜா ஆட்டோவில் இருந்து இறங்கி பின்னால் மோட்டார் சைக்கிளில் நின்றிருந்த 2 வாலிபர்களை பின்னோக்கிச் செல்ல அறிவுறுத்தி இருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் இளையராஜாவை கடுமையாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த இளையராஜா சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இளையராஜாவை தாக்கிய 2 வாலிபர்களையும் வலை வீசி தேடி வருகிறார்கள்.
Next Story






