என் மலர்
உள்ளூர் செய்திகள்

செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது
கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற கோபி மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சேலம்
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகீர் ரெட்டிபட்டி இண்டேன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது 24) இவர் அதே பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற கோபி மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோபி உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த விலை உயர்ந்த செல்போன்கள் 3 மற்றும் கல்லாவில் இருந்த ரொக்கம் ரூ.15 ஆயிரம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.இது குறித்து கோபி சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கடையில் திருடிய ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் சசிகுமார் (20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






