என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொய் வழக்கு போட்டு தாக்கியதாக புகார்-கலெக்டர் கார் முன்பு பெண் தர்ணா
- திடீரென கலெக்டர் கார் முன்பு அமர்ந்து தர்ணா
- மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை
சேலம்
சேலம் ஜான்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார். அப்போது திடீரென கலெக்டர் கார் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து போலீசார் அவரை மீட்டு பேச்சுவார்த்தை நடத்தி மனு கொடுக்க ஏற்பாடு செய்தனர்.
அப்போது சரஸ்வதி கூறியதாவது:-
ஜான்சன் பேட்டை மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்த போது அங்கு அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியது.இந்த நிலையில் அவர்களை ஒன்று கூடி கோவில் திருவிழா நடத்தலாம் என நான் தெரிவித்தேன். அங்கிருந்த சிலர் என்னை தகாத வார்த்தையில் பேசி மிரட்டினர் .இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்த போது அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால் வீட்டிற்கு சென்ற நான் மண் எண்ணையை உடலில் ஊற்றியபடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றேன்.
அங்கு வந்த அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கினார். பின்னர் என் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். 7 நாள் சிறையில் இருந்த நான் ஜாமீனில் வெளியே வந்தேன்.பொய் வழக்கு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னைக்குச் சென்று புகார் தெரிவித்த நிலையில் அவர்கள் மீண்டும் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.கடந்த 4 மாதமாக போலீஸ் நிலையத்திற்கு சென்று முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டர் தலையிட்டு என்மீது போடப்பட்ட பொய் புகார் மீது உரிய விசாரனை நடத்தி தன்னை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீதும் பொய்யான புகார் கொடுத்த கோவில் தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






