என் மலர்
உள்ளூர் செய்திகள்

நகைகடையில் திருடிய ஊழியர் மீது வழக்கு
- கடந்த 20-ந் தேதி கடை மேலாளர் நகையை சரிபார்க்கும் போது அதில் 10 கிராம் நகை குறைவாக இருந்தது
- சி.சி.டி.வி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது நகையை அங்கு வேலை செய்யும் கார்த்திக் எடுத்தது தெரிய வந்தது.
சேலம்
சேலம் ஓமலூர் மெயின் ரோடு டி.வி.எஸ் பஸ் நிறுத்தம் அருகே பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் சூரமங்கலம் ஜாகீர் அம்மாப்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோ மகன் கார்த்திக் (வயது 38) என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த 20-ந் தேதி கடை மேலாளர் நகையை சரிபார்க்கும் போது அதில் 10 கிராம் நகை குறைவாக இருந்து தெரியவந்தது. இதையடுத்து சி.சி.டி.வி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது நகையை அங்கு வேலை செய்யும் கார்த்திக் எடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் நகையை திருடி வேறு இடத்தில் அடகு வைத்தது தெரியவந்தது.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






