search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில்  2.85 லட்சம் விவசாயிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம்   தீபாவளிக்கு முன்னதாக மத்திய அரசு வழங்கியதால் மகிழ்ச்சி
    X

    சேலம் மாவட்டத்தில் 2.85 லட்சம் விவசாயிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் தீபாவளிக்கு முன்னதாக மத்திய அரசு வழங்கியதால் மகிழ்ச்சி

    • தமிழ்நாட்டில் இந்த கவுரவ நிதித் திட்டம் 1.12.2018 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • 12-வது தவணை நிதி தீபாவளிக்கு முன்னதாகவே மத்திய அரசால், விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    சேலம்:

    பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகள் தங்களது வேளாண் தொழிலை விட்டு விடாமல் மேம்படுத்திக் கொள்ள வேண்டி விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (பி.எம்.கிசான்) எனும் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

    12-வது தவணை விடுவிப்பு

    தமிழ்நாட்டில் இந்த கவுரவ நிதித் திட்டம் 1.12.2018 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு தேவை–யான இடுபொருட்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு, விவசாய குடும்பத்திற்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் ஆண்டிற்கு ரூ.6000 என 3 தவணைகளாக வழங்கி வருகின்றது. இதுவரை இத்திட்–டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு 11 தவணைத் தொகைகள் நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 12-வது தவணை நிதி தீபாவளிக்கு முன்னதாகவே மத்திய அரசால், விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 12-வது தவணை தொகையான 16 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் நேற்று விடுவித்தார்.

    விவசாயிகள் மகிழ்ச்சி

    சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த தொைக தீபாவளிக்கு முன்னதாக மத்திய அரசு வழங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இத்திட்டத்தில் ஆதார் அடிப்படையிலான நிதி விடுவிப்பு நடைபெறுவதால் தகுதியான விவசாயிகள் அனைவரும் தங்கள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திடவும், இ-கே.ஒய்.சி.-ஐ பதி–வேற்றம் செய்வதும் கட்டாயமாகும். இந்த திட்டத்தில் நாடு முழுவதும் இதுவரை 11 கோடி விவசாயிகளுக்கு 2.16 லட்சம் கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×