என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காட்டில் விடிய விடிய கொட்டிய மழைஇயல்பு வாழ்க்கை பாதிப்பு
    X

    ஏற்காட்டில் பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்யும் காட்சி. 

    ஏற்காட்டில் விடிய விடிய கொட்டிய மழைஇயல்பு வாழ்க்கை பாதிப்பு

    • சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவில் தொடர் மழை பெய்தது.
    • இன்று விடியற்காலையில் இருந்து மாநகர பகுதிகளில் சாரல் மழை பெய்தவாறு இருந்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷணம் நிலவுகிறது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவில் தொடர் மழை பெய்தது. இன்று விடியற்காலையில் இருந்து மாநகர பகுதிகளில் சாரல் மழை பெய்தவாறு இருந்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷணம் நிலவுகிறது.

    ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இத னால் குளிர்ச்சியான சீதோஷணம் நிலவி வருகிறது.

    இந்நிலையில், நேற்று இரவு முதல் ஏற்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. விடிய விடிய பெய்த மழை, விடிந்த பிறகும் விடாமல் சாரல் மழையாக பெய்து வருகிறது.

    மேலும் பனிமூட்டத் துடன் மழை பெய்து வருவதால் ஏற்காடு பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.

    பொதுவாக ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் நவம்பர், டிசம்பர் மாதங் களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். அப்போது குளிர் வாட்டி வதைக்கும். ஆனால் தற்போது அதிக மழை பொழிவு, பனி மூட்டம் காரணமாக குளிர் அதிகள வில் காணப்படுகிறது. இதனால் மக்கள் ஜெர்கின், ஸ்வெட்டர் மற்றும் குல்லா அணிந்தும், குடை பிடித்தபடியும் நடமாடினர்.

    ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலைகிராம மக்கள் காபி விவசாயத்தை நம்பியுள்ளனர். தற்போது பெய்து வரும் மழையால் காபி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே ஏற்காட்டில் பெய்து வரும் மழையால், மலை பாதை யில் உள்ள நீரூற்றுகளில் தண்ணீர் கொட்ட தொடங்கி உள்ளது. இதனை ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    மாவட்டத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): ஏற்காடு-3.88, சேலம்-2.8, ஓமலூர்-1.6, எடப்பாடி-1, காடையாம்பட்டி-0.5 என மொதத்தம் 9.7 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×