என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம்-கோவை பயணிகள் ரெயில் வருகிற 30-ந்தேதி வரை ரத்து
- கோவை- திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
- 30-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
சேலம்:
கோவை- திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையை தவிர தினமும் இயக்கப்பட்டு வந்த சேலம் -கோவை பயணிகள் ரெயில் (06802) மற்றும் கோவை- சேலம் பயணிகள் ரெயில் (06803) வருகிற 30-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த ரெயில் சேலம் ஜங்சனில் இருந்து வீரபாண்டி ரோடு, மகுடஞ்சாவடி, மாவேலிபாளையம், சங்ககிரி, காவிரி, ஈரோடு, திருப்பூர் வழியாக கோவை ஜங்சன் ரெயில் நிலையம் வரை இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Next Story






