search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் 120 மாணவர்களுக்கு ரூ.4 கோடி கல்விக்கடன்  கலெக்டர் விசாகன் வழங்கினார்
    X

    முகாமில் கடனுதவிக்கான ஆைணயை கலெக்டர் விசாகன் வழங்கினார். அருகில் வங்கி அதிகாரிகள் உள்ளனர்.

    திண்டுக்கல்லில் 120 மாணவர்களுக்கு ரூ.4 கோடி கல்விக்கடன் கலெக்டர் விசாகன் வழங்கினார்

    • திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
    • 120 மாணவர்களுக்கு மட்டும் ரூ.4 கோடி அளவிற்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு கல்விக்கடனுதவிகளை வழங்கி பேசியதாவது,

    திண்டுக்கல் மாவட்டத்தில் கல்விக்கடன் கேட்டு வரும் விண்ணப்பங்கள் அனைத்தும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.

    கடன் இல்லை என்ற நிலையில் தொழில் ஆரம்பிக்கவோ, கல்விக்காகவே இருக்ககூடாது. ஒருநாட்டில் தொழில் அதிகரித்தால்தான் வளர்ச்சி அதிகரிக்கும். கடந்த ஒருமாத காலத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மூலம் 258 நபர்களுக்கு ரூ.12.68 கோடி மதிப்பிலான கல்விக்கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகள் 1500 பேர்களுக்கு கடன் வழங்கப்பட்டது. மாநிலத்திலேயே திண்டுக்கல் மாவட்டம் அதிககடன் வழங்கியதற்காக பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளது. கல்விக்கடன் மாணவர்களை பொறுத்தவரை கஷ்டப்படாமல் படிப்பதற்காகவும், மற்றவர்கள் கஷ்டப்பட்டாலும் அதை பெறுவதற்கான அணுகுமுறைதான். இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த முகாமிற்கு 251 மாணவ-மாணவிகள் கடன் கேட்டு விண்ணப்பம் அளித்திருந்தனர்.

    இதில் 120 மாணவர்களுக்கு மட்டும் ரூ.4 கோடி அளவிற்கு கடன் உதவிகள் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு கூடுதல் சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட வங்கிகளை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விக்கடன் தேவைப்படும் அனைவரும் முன்னோடி வங்கி மேலாளரை அணுகி பயன்பெறலாம் என்றார்.

    Next Story
    ×