என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே ரூ.17 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்
    X

    திட்டப்பணிகளை மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    ஆலங்குளம் அருகே ரூ.17 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்

    • வாறுகால் அமைக்கும் பணியை மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் கடங்கநேரி ஊராட்சி துணை தலைவர் தங்ககிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள வெங்கடேஸ்வபுரம் என்ற ரெட்டியார்பட்டியில் ரூ. 17.1 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

    மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து ரூ. 9.9 லட்சம் மதிப்பில் வாறுகால் அமைக்கும் பணி மற்றும் ரூ. 7.20 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கடங்கநேரி ஊராட்சி துணை தலைவர் தங்ககிருஷ்ணன், காங்கிரஸ் நிர்வாகி மகராஜசிங், வார்டு உறுப்பினர்கள் அசோக், சுந்தரி, ஊராட்சி செயலர் அந்தோணி, அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×