search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுகள் தீப்பிடித்ததில் ரூ.13 லட்சம் பொருட்கள் நாசம்
    X

    தீ விபத்தில் எரிந்து நாசமான கூரை வீடு.

    வீடுகள் தீப்பிடித்ததில் ரூ.13 லட்சம் பொருட்கள் நாசம்

    • மூங்கில் மரங்களில் பரவிய தீப்பொறி காற்றில் பறந்து சிலம்பரசன் வீட்டின் கூரையில் பட்டு கூரை எரியத் தொடங்கியது.
    • சவுண்ட் சர்வீஸ் பொருட்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த முயன்ற போது தீ வீடு முழுக்க பரவியுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே பள்ளிவாரமங்கலம் மேலராமநாதபுரத்தில் வசித்து வரும் தமிழரசன் மகன் சிலம்பரசன் தனது வீட்டிலேயே சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார். அவரது வீட்டிற்கு எதிர் புறம் மூங்கில் மரங்கள் அதிகம் உள்ளது. இந்த மூங்கில் குத்தில் லேசாக தீ பற்றி எரிந்துள்ளது.

    இதை கவனித்த சிலம்பரசன் அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவக்கூடிய அபாயம் இருப்பதால் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கலாம் என்கிற அடிப்படையில் அருகில் உள்ள வீட்டிற்கு சென்று ஊராட்சி மன்றத் தலைவருக்கு தொலைபேசி எண்ணை வாங்கி தகவல் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில் மூங்கில் மரங்களில் பரவிய தீப்பொறி காற்றில் பறந்து சிலம்பரசன் வீட்டின் கூரையில் பட்டு கூரை எரியத் தொடங்கியுள்ளது. அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிலம்பரசனின் மகள் லியாஸ்ரீ (வயது6) அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சிலம்பரசன் குழந்தையை காப்பாற்றினார்.பிறகு தனது சவுண்ட் சர்வீஸ் பொருட்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த முயன்ற போது தீ வீடு முழுவதுமாகப் பரவி உள்ளது. அங்கிரு ந்தவர்கள் தீயை அனைத்து பார்த்துள்ளனர். அதற்குள் வீடு முழுவதும் எரிந்து பொருட்கள் தீயில் கருகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அருகிலிருந்த மகேந்திரன் என்பவர் வீட்டின் கூரையிலும் தீ பரவியது.

    சிலம்பரசன் வீட்டில் இருந்த சவுண்ட்சர்வீஸ் பொருட்களானஸ்பீக்கர், ஆம்ப், ஹாரன் உள்ளிட்ட பொருட்கள் முழுவதுமாக தீயில் கருகின. அதேபோ ன்று வீட்டிலுள்ள குளிர்சாத னப்பெட்டி டிவி கிரைண்டர் மிக்ஸி உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் வெள்ளி பொருட்கள், தங்க நகைகள் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் என மொத்தம் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சிலம்பரசன் வீட்டில் சேதமடைந்துள்ளது.

    மகேந்திரன் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்து கருகின. மேலும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ அடுத்தடுத்து வீடுகளுக்கு பரவாமல் தடுத்து அணைத்தனர்.

    இது குறித்து வைப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பகல் நேரத்தில் இந்த ஏற்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    Next Story
    ×