என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூட்டைக்கு ரூ.100 கூடுதல்:  மாட்டுத்தீவனம் விலை உயர்வால் பால் உற்பத்தியாளர்கள் கவலை
    X

    மூட்டைக்கு ரூ.100 கூடுதல்: மாட்டுத்தீவனம் விலை உயர்வால் பால் உற்பத்தியாளர்கள் கவலை

    • மாட்டு தீவனங்களின் விலை உயர்வு அடுத்த அதிர்ச்சியாகி உள்ளது.
    • சரியான விலையில் மாட்டு தீவனங்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ள நிலையில் கால்நடைகள் வளர்ப்பு அவர்களுக்கு வருமானம் தரும் மற்றொரு தொழிலாக உள்ளது.

    விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை அரசு கூட்டுறவு அமைப்புகள் மூலம் விற்று வருமானம் பார்க்கின்றனர்.

    ஆனால் அரசு வழங்கும் கொள்முதல் விலை போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் கூறி வந்தனர்.

    இந்நிலையில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி அரசு சமீபத்தில் அறிவித்தது.இதனால் சற்றே அவர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் மாட்டு தீவனங்களின் விலை உயர்வு அடுத்த அதிர்ச்சியாகி உள்ளது.

    பொட்டு தீவனம், மீடியம் தீவனம், நைஸ் தீவனம், குச்சித்தீவனம் உள்ளிட்டவை தற்போது மூட்டை ஒன்றுக்கு ரூ.100 வரை உயர்ந்துள்ளது.

    தீவனங்களுக்கு தேவைப்படும் கோதுமை அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவதால் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

    ஆனால் மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பே கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து விட்டது குறிப்பிட தக்கது.

    எனவே இந்த விலை உயர்வு குறித்து அதிகாரிகள் விசாரித்து பால் உற்பத்தியாளர்களுக்கு சரியான விலையில் மாட்டு தீவனங்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    Next Story
    ×