search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகன சோதனையில் ரூ.6 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்- 2 பேரிடம் விசாரணை
    X

    வாகன சோதனையில் ரூ.6 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்- 2 பேரிடம் விசாரணை

    • போலீசாரின் வாகன சோதனையின்போது ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்படும் நகைகள், ரொக்கப் பணம் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
    • நகைகளை பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட முகேஷ் பவர்லால் ஜெயின், சிக்கந்தர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    சென்னையில் உள்ள சில நகைக்கடைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் நகைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளன.

    போலீசாரின் சோதனையின்போது இப்படி ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்படும் நகைகள் மற்றும் ரொக்கப் பணம் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் போலீசாரின் வாகன சோதனையின்போது ரூ.6 கோடி மதிப்புள்ள 14 கிலோ தங்க நகைகள் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சவுகார்பேட்டை, ஆதியப்பா தெருவில் நேற்று இரவு யானைகவுனி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் ராஜ்குமார், போலீஸ்காரர் சுரேஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக பெரிய பைகளுடன் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர்.

    அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் தங்க நகைகளாக வளையல், செயின், மோதிரங்கள் உள்ளிட்டவை இருந்தன. மொத்தம் 14 கிலோ தங்க நகைகள் இருந்தன.

    விசாரணையில் அவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த முகேஷ்பவர்லால் ஜெயின், சிக்கந்தர் என்பது தெரிந்தது.

    அவர்கள் மும்பையில் உள்ள ஒரு நகைக்கடையில் இருந்து தங்க நகைகளை வாங்கிக்கொண்டு, சவுகார்பேட்டை, என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு விற்பனை செய்ய எடுத்து வந்ததாக தெரிவித்தனர்.

    ஆனால் அவரிகளிடம் தங்க நகைக்கான எந்த ஆவணமும் இல்லை. அவர்கள் ஆவணங்கள் இல்லாமல் 14 கிலோ தங்க நகைகளை எடுத்து வந்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6 கோடி ஆகும். இதுபற்றி வருமான வரித்துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    வருமான வரித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் நகைகளை பறிமுதல் செய்து இதுபற்றி மேலும் பிடிபட்ட முகேஷ் பவர்லால் ஜெயின், சிக்கந்தர் ஆகியோரிடம் விபரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×