என் மலர்
உள்ளூர் செய்திகள்

செஞ்சி அருகே ஒரே ஊரில் 2 வீடுகளில் கொள்ளை
- மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஒன்றரைப் பவுன் நகைகளை திருடி சென்றுள்ளனர்.
- வெள்ளி கொலுசு, 100 கிராம் வெள்ளி அரைஞான் கயிறு ரூ.15,000 ரொக்கம் ஆகியவைகளை திருடி சென்றுள்ளனர்.
விழுப்புரம்:
செஞ்சி அருகே உள்ள காமகரம் என்ற ஊரை சேர்ந்தவர் சுப்ரமணி இவரது மகன் குமரவேல் (வயது 32). இவர் செஞ்சியில் உள்ள வருவாய் துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி திண்டிவனத்தில் பத்திரபதிவு அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இருவரும் ஆங்காங்கேயே தங்கி உள்ளதால் வீடு பூட்ட ப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஒன்றரைப் பவுன் நகைகளை திருடி சென்றுள்ளனர்.
இதே போல் அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மகன் குமார் (39) என்பவர் தனது குடும்பத்துடன் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் பக்கத்து அறையில் இருந்த பீரோவை திறந்து பீரோவில் இருந்து 200 கிராம் வெள்ளி கொலுசு, 100 கிராம் வெள்ளி அரைஞான் கயிறு ரூ 15,000 ரொக்கம் ஆகியவைகளை திருடி சென்றுள்ளனர். வீட்டினுள் உரிமையாளர் உறங்கி கொண்டிருந்த போதே திருடர்கள் தங்களின் கைவரிசையை காட்டியுள்ளனர். இச்சம்பவங்கள் குறித்து நல்லான் பிள்ளை பெற்றான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.






