என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகனங்களுக்கான சாலை வரி வசூல் சிறப்பு முகாம்
- வாகன உரிமையாளர்கள் 2023-2024 -ம் நிதியா ண்டிற்கான சாலை வரியினை 10.04.2023 -க்குள் அபராதம் ஏதும் இன்றி செலுத்தலாம்.
- தவறும் பட்சத்தில் உரிய அபராதத்துடன் செலுத்த நேரிடும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:-
2023-2024 -ம் நிதியாண்டிற்கான போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கான சாலை வரி வசூல் சிறப்பு முகாம் 26.03.2023 முதல் 10.04.2023 வரை வட்டார போக்குவரத்து அலுவலகம், தருமபுரி மற்றும் இவ்வலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும் அரூர், பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் நடத்தபடுகிறது.
இச்சிறப்பு முகாமானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலக வேலை நாட்களில் நடைபெறும்.
எனவே, ஆண்டு வரி செலுத்தக்கூடிய கார், ஜே.சி.பி, கிரேன், டிராக்டர், கம்பரசர் மற்றும் ரிக் வாகன உரிமை யாளர்கள் இச்சிறப்பு முகாமை பயன்படுத்தி அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரியினை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
வாகன உரிமையாளர்கள் 2023-2024 -ம் நிதியா ண்டிற்கான சாலை வரியினை 10.04.2023 -க்குள் அபராதம் ஏதும் இன்றி செலுத்தலாம்.
தவறும் பட்சத்தில் உரிய அபராதத்துடன் செலுத்த நேரிடும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. சாலை வரி செலுத்த வரும் வாகன உரிமையாளர்கள் வாகனத்தின் அசல் பதிவுச்சான்று, காப்புச்சான்று, பசுமைவரி மற்றும் புகைச்சான்று ஆகியவற்றை சமர்ப்பித்து உரிய தெளிவுரை பெற்றுக்கொண்டு இணையதளம் மூலம் வரியை செலுத்துமாறு கேட்டுக்கொள் ளப்படுகிறது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.