என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏக்கல்நத்தம் மலை கிராமத்தில் காட்டாறு வெள்ளத்தில் மூழ்கிய சாலை:   தினமும் ஆபத்தான முறையில் தண்ணீரில் இறங்கி கிராம மக்கள் பயணம்
    X

    தினமும் ஆபத்தான முறையில் தண்ணீரில் இறங்கி பயணம் செய்யும் கிராம மக்களை படத்தில் காணலாம்.

    ஏக்கல்நத்தம் மலை கிராமத்தில் காட்டாறு வெள்ளத்தில் மூழ்கிய சாலை: தினமும் ஆபத்தான முறையில் தண்ணீரில் இறங்கி கிராம மக்கள் பயணம்

    • மாவட்டத்தில் பெய்து கனமழை காரணமாக மலை கிராமத்திற்கு செல்லும் சாலை முழுவதும் தண்ணீரில் மூழ்கியது.
    • தண்ணீர் செல்ல வழியில்லாமல் இடுப்பளவு தண்ணீரில் தினமும் கிராம மக்கள் ஆபத்தான முறையில் கிராம மக்கள் கயிறு கட்டி கடந்து சென்று வருகின்றனர்.

    வேப்பனபள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள ஏக்கல்நத்தம் மலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த மலைகிராமத்திற்கு சுமார் 3 கிலோமீட்டர் தொலைவு அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டும்.

    இந்நிலையில் கடந்த பல வருடங்களாக இந்த கிராமத்திற்கு சாலை இல்லாமல் இருந்தது. கிராம மக்கள் பல வருடங்களாக போராடி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கிராமத்தில் ஆபத்தான அடர்ந்த வனப்பகுதியில் முதல் முறையாக தார் சாலை வசதி அமைக்கப்பட்டது.

    மாவட்டத்தில் பெய்து கனமழை காரணமாக மலை கிராமத்திற்கு செல்லும் சாலை முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. தார் சாலை அமைக்கும் பொழுது தாழ்வான பகுதிகளில் தரை மேம்பாலம் ஏதும் அமைக்கப்படாமல் சாலை அமைக்கப்பட்டதால் இப்பகுதியில் மலையில் இருந்து வரும் நீர் முழுவதும் சாலையில் தேங்கி நிற்கிறது.

    தண்ணீர் செல்ல வழியில்லாமல் இடுப்பளவு தண்ணீரில் தினமும் கிராம மக்கள் ஆபத்தான முறையில் கிராம மக்கள் கயிறு கட்டி கடந்து சென்று வருகின்றனர்.

    தண்ணீர் வற்றாமல் சாலையில் தேங்கி நிற்பதால் இப்பகுதியில் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் வீட்டிலேயே உள்ளனர். ரேஷன் பொருட்கள் மற்றும் அன்றாட காய்கறிகளை வாங்க கூட ஆபத்தான முறையில் தினமும் கயிறு கட்டி தண்ணீரில் இறங்கி ஒரு சிலர் மட்டும் பயணம் செய்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இடுப்பளவு தண்ணீரில் கயிறு கட்டி தினமும் கிராம மக்கள் பயணம் செய்து வருகின்றனர். பல வருடங்களாக போராடி பெற்ற சாலை சிறிதும் பயன்படாமல் உள்ளதால் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் உடனடியாக தரை மேம்பாலம் அமைத்து கிராமத்திற்கு சாலையை சீராக அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    Next Story
    ×