என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேங்கி கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
- கடத்தூர் பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 3 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்-
தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம், சில்லார அள்ளி ஊராட்சியில் இந்திரா நகர், அம்பேத்கர் நகர், பாரதி நகர், குண்டல் மடுவு , பூஞ்சோலை நகர் மற்றும் அண்ணா நகர் என 6 குக்கிராமங்கள் உள்ளன. இதில், 3-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இதில் சில்லாரஅள்ளியில் வசிக்கும் மக்கள் பயன்ப டுத்தும் குப்பைகள் தெருக்களில் கொட்டப்ப டுகிறது. இதனை ஊராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர் மூலம் அப்புறப்படுத்தி தருமபுரி- பொம்மிடி மெயின் ரோட்டில் கொட்டி தீ வைத்து அழித்தனர்.
இதனால் புகை மூட்டத்தால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தருமபுரி -பொம்மிடி சாலையில் குப்பைகளை கொட்ட கூடாது என அப்பகுதி மக்கள் , கடத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் அமர்ந்து போராட்டங்களை கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடத்தினர்.
இதனால் குப்பைகளை கொட்ட ஊராட்சி நிர்வாகம் மூலம் தனி இடத்தை பார்த்து கொட்ட வேண்டும் என ஒன்றிய அதிகாரிகள் அறிவு றுத்தினார்கள். ஆனால் , அதிகாரிகளே வந்து எந்த இடம் என காட்ட வேண்டும் என கூறி, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தெருக்களில் உள்ள குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் அப்பு றப்படுத்தாமல் விட்டு வைத்துள்ளது.
பணியாளர்களையும் குப்பைகளை அகற்ற கூடாது என வாய்மொழி யாக தெரிவித்ததாக கூறப்படுகின்ற நிலையில் ஆங்காங்கே தெருக்களில் குப்பைகள் மழை போல் தேங்கி உள்ளது. தேங்கி இருக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகின்றது.
இதனால் அப்பகுதி மக்கள் வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகி வருகின்றது. ஆகவே தெருக்களில் கொட்டப்படும் குப்பை களை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






