என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விக்கிரவாண்டியில் பரபரப்பு: திருமணமான இளம் பெண் கிணற்றில் பிணமாக மீட்பு
  X

  விக்கிரவாண்டியில் பரபரப்பு: திருமணமான இளம் பெண் கிணற்றில் பிணமாக மீட்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விக்கிரவாண்டியில் திருமணமான இளம் பெண் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
  • மர்மமான முறையில் கலைச்செல்வி இறந்து கிடந்தார்.

  விழுப்புரம்:

  விக்கிரவாண்டி அருகே பெரியதச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் கோபிநாத் வயது 25 அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மகள் கலைச்செல்வி (வயது 23) இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களது காதல் இருவரின் வீட்டிற்கு தெரிய வரவே இருவரது பெற்றோர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சமயத்தில் கோபிநாத் மற்றும் கலைச்செல்வி இருவரும் வீட்டை மீறி ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு கலைச்செல்வி அம்மா வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

  இந்த நிலையில் இன்று காலை அதே பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள ஒரு கிணற்றில் மர்மமான முறையில் கலைச்செல்வி இறந்து கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்த பெரியதச்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயணைப்பு படை போலீசாரின் உதவியுடன் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான இரண்டு மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் கிணற்றில் பிணமாக கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக உள்ளது.

  Next Story
  ×