என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ கைது
- வாரிசு சான்றிதழ் வழங்க வாலிபரிடம் வருவாய் ஆய்வாளர் ரூ.8000 லஞ்சமாக கேட்டுள்ளார்.
- வாலிபர் லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அதிகாரிகள் ஆர்.ஐ.லஞ்சம் வாங்கும் போது கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா காவேரியம்மாபட்டி வருவாய் ஆய்வாளராக இருப்பவர் பாண்டியன். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் அவரது தந்தை வேலுச்சா மிக்கு வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.
அப்போது சான்றிதழ் வழங்க வருவாய் ஆய்வாளர் பாண்டியன் ரூ.8000 லஞ்சமாக கேட்டு ள்ளார். அதனால் இதுகுறி த்து மாரிமுத்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதை யடுத்து மாரிமுத்து ரசா யனம் தடவிய ரூ.8,000 பணத்தை வருவாய் ஆய்வாளர் பாண்டியனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி நாகராஜன் தலைமையிலான போலீசார் பாண்டியனை சுற்றிவளை த்து கைது செய்தனர்.
Next Story






