என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்திய மாநில அரசு திட்ட பணிகள் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் பி.டி.ஓ. அலுவலக கூட்ட அரங்கில் நடந்த போது எடுத்த படம்.
வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
- ஆய்வு கூட்டம் பி.டி.ஓ. அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
- கோடை காலம் தொடங்கியதால் முறையான குடிநீர் விநியோகம் இருக்க வேண்டும்
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய த்துக்கு உட்பட்ட 30 பஞ்சாயத்துகளில் நடந்து வரும் மத்திய மாநில அரசு திட்ட பணிகள் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் பி.டி.ஓ. அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
கூட்டத்தில் உதவி இயக்குனர் (தணிக்கை) லோகநாதன் தலைமை வகித்து 30 பஞ்சாயத்துகளில் நடந்து வரும் வளர்ச்சிப் திட்ட பணிகளை உரிய காலத்திற்குள் முடித்தல், தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணிகள் மற்றும் கோடை காலம் தொடங்கியதால் முறையான குடிநீர் விநியோகம் இருக்க வேண்டும் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பி.டி.ஒ.க்கள் ரவி கலைவாணி மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.