search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜமாபந்தியில் 850 மனுக்களுக்கு தீர்வு
    X

    விழாவில் நலத்திட்ட உதவிகளை சப்-கலெக்டர் சரண்யா வழங்கினார்.

    ஜமாபந்தியில் 850 மனுக்களுக்கு தீர்வு

    • 1695 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
    • தாலுகா அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், கடந்த 2-ம் தேதி ஜமாபந்தி துவங்கியது. ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    இறுதி நாளான நேற்று வரை 1695 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். அதில் 850 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    நேற்று தாலுகா அலுவ லகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் இயற்கை மரணஈமச்சடங்கு நிதி, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா, இலவச வீட்டுமனைப்பட்டா என மொத்தம் 151 பயனாளி களுக்கு ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முகம், தாசில்தார் சரவணமூர்த்தி, தனி தாசில்தார் மோகன்தாஸ், வட்ட வழங்கல் அலுவலர் பேபி, மண்டல துணை தாசில்தார்கள் மதன்ராஜ்,ராஜாகண்ணு, சர்வேயர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×