என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாக்கடையில் நடப்பட்ட மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை
    X

    சாக்கடையில் நடப்பட்ட மின் கம்பத்தை பார்வையிட்ட ஊரக வளர்ச்சித் துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள்.

    சாக்கடையில் நடப்பட்ட மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை

    • பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள மின்கம்பம் ஒன்றை, அதே பகுதியை சேர்ந்த ஒருவர், வேறு இடத்தில் மாற்றி அமைக்குமாறு, மின்வாரியத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
    • கழிவுநீர் சாக்கடையிலேயே நடப்பட்டுள்ள மின் கம்பத்தை அகற்றவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த துக்கி யாம்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் மேற்கு புறமுள்ள நடுவீதியில், பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள மின்கம்பம் ஒன்றை, அதே பகுதியை சேர்ந்த ஒருவர், வேறு இடத்தில் மாற்றி அமைக்குமாறு, மின்வாரியத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து, ஒரு மாதத்திற்கு முன்பு இந்த கம்பத்தை மாற்றி அமைப்பதற்காக, அருகில் உள்ள மற்றொரு தெருமுனையில், கழிவுநீர் சாக்கடையில் புதிதாக மின்கம்பம் நடப்பட்டது.

    இதற்கு இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மின்பாதையை புதிய கம்பத்தில் மாற்றி கொடுக்காமல், பழைய கம்பத்திலேயே தொடர்ந்து மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் இதுகுறித்து கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், கழிவுநீர் சாக்கடையிலேயே நடப்பட்டுள்ள மின் கம்பத்தை அகற்றவும், ஏற்கனவே, நல்ல நிலையில் பயன்பாட்டிலுள்ள மின் கம்பத்திலேயே தொடர்ந்து மின் வினியோகம் செய்யவும், மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×