search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க  கோரிக்கை
    X

    கோவில் நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க கோரிக்கை

    • தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் கோவிலுக்கு எண்ணற்ற வருவாய் கிடைத்தது.
    • தமிழக அரசும் அறநிலையத்துறையும் சிந்திக்க வேண்டும்.

    திருப்பூர் :

    கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களுக்கு ஏறத்தாழ 4 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் உள்ளன. கோவில்களுக்கு நிரந்தர வருவாய் ஏற்படுத்தவும், செலவினங்களை ஈடு செய்யும் வகையிலும் இது போன்ற நிலங்கள் பயன்பட்டன. கொடை வள்ளல்கள், பக்தர்கள் கோவில் பெயருக்கு தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் கோவிலுக்கு எண்ணற்ற வருவாய் கிடைத்தது.

    இவற்றில் பெரும்பாலான நிலங்கள் பயன்பாடின்றி விடப்பட்டுள்ளன. இவ்வாறான நிலங்களில் ஆழ்துளை கிணறு மூலம் நீர் பாசன வசதி ஏற்படுத்தி இவற்றை குத்தகைக்கு விடுவதன் மூலம் அறநிலையத்துறையின் வருவாய் பெருகும். மேலும் பாசன வசதி கிடைப்பதால் விவசாயிகளும் ஆர்வத்துடன் விவசாயம் மேற்கொண்டு வேளாண் உற்பத்தியை பெருக்குவார்கள். அரசுக்கு கூடுதல் வருவாய், வேலை உற்பத்தி அதிகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு பெருகுதல் என்பது உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். எனவே இது குறித்து தமிழக அரசும் அறநிலையத்துறையும் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×