என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
காமராஜர் பிறந்தநாளில் மதுக்கடைகளை மூட வேண்டும் - தமிழ்நாடு நாடார் சங்கம் கோரிக்கை
- காமராஜர் பிறந்தநாளில் மதுக்கடைகளை மூட வேண்டும் என - தமிழ்நாடு நாடார் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
- தேனி மாவட்ட கலேக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் அரசு அலுவலகங்களில் காமராஜர் படம் வைத்து விழா நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தமிழ்நாடு நாடார் சங்க மாவட்ட தலைவர் ஜெய்முருகேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் வந்தனர்.
மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
அவருடைய பிறந்தநாளை தமிழக அரசு கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது. தேனி பங்களாமேட்டில் காமராஜருக்கு சிலை அமைக்க வேண்டும். காமராஜர் பிறந்தநாளில் அரசு மதுபான கடைகள், தனியார் மதுபான பார்களை மூட வேண்டும். அரசு அலுவலகங்களில் காமராஜர் உருவப்படம் வைத்து விழா நடத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.
Next Story






