search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குப்பாண்டம்பாளையம் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை
    X

    சேதமடைந்தத பள்ளி சுற்றுச்சுவரை படத்தில் காணலாம்.

    குப்பாண்டம்பாளையம் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை

    • அங்காடி முதல் 8ம் வகுப்பு வரை அப்பகுதியை சுற்றியுள்ள சுமார் 200க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • மேல்நிலைத் தொட்டியை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரன் மூலம் இடித்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு குப்பாண்டம்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது .இங்கு அங்காடி முதல் 8ம் வகுப்பு வரை அப்பகுதியை சுற்றியுள்ள சுமார் 200க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்துவருகிறார்கள்.இந்த நிலையில் 7மாதங்களுக்கு முன் பள்ளியின் அருகே பயன்படாமல் இருந்த மேல்நிலைத் தொட்டியை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரன் மூலம் இடித்துள்ளனர்.அப்பொழுது பள்ளியின் சுவர் மீது விழுந்து சுவர் முழுவதும் சேதமடைந்தது.

    மாநகராட்சி அதிகாரிகள் பள்ளி சுவரை கட்டித் தருவதாக உறுதியளித்தார்கள். ஆனால் இதுவரைக்கும் சுவர் கட்டித்தரவில்லை.தற்பொழுது பள்ளி சுவர் உடைக்கப்பட்டு இருப்பதால் அதனை பயன்படுத்தி பலரும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை உள்ளே உடைத்துவிட்டு செல்கின்றார்கள்.இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துவருகின்றனர்.மேலும் இதுகுறித்து பள்ளி சார்பாகவும் மாவட்ட நிர்வாகித்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டும் தற்பொழுது பள்ளி தொடங்கப்பட்டுள்ள நிலையை கருத்தில் கொண்டும் பள்ளியின் பாதுகாப்பு சுவரை உடனடியாக கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×