search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறை மாவட்டத்தில் குடியரசு தினவிழா கோலாகலம்
    X

    மயிலாடுதுறை மாவட்டம், சாய் விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட கலெக்டர் லலிதா தேசியக்கொடியை ஏற்றினார்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் குடியரசு தினவிழா கோலாகலம்

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் லலிதா தேசியக்கொடியை ஏற்றினார்.
    • கலெக்டர் திறந்தவெளி ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம், சாய் விளையாட்டு அரங்கத்தில் (ராஜன் தோட்டம்) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் லலிதா இன்று (26.01.2023) காலை 08.05 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைத்து பல்வேறு துறைகளின் சார்பில் 398 பயனாளிகளுக்கு ரூ.9,31,24,416 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து கலெக்டர் திறந்தவெளி ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    74-வது குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னால் படைவீரர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பில் கல்வி உதவித்தொகை மற்றும் வருடாந்திர பராமரிப்பு தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு தலா ரூ.18,000 மதிப்பில் மாற்றுத்திறனாளி உதவித்தொகையும், வருவாய்த்துறையின் சார்பில் 40 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் முதியோர் உதவித்தொகையும், 40,பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் விதவை உதவித்தொகையும்,10 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகையும், 36 பயனாளிகளுக்கு தலா ரூ.8 ஆயிரம் மதிப்பில் ஆண்களுக்கு திருமண உதவித்தொகையும், 36 பயனாளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பில் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும்,27 பயனாளிகளுக்கு தலா ரூ,2500 மதிப்பில் இறப்பு உதவித்தொகையும், 1 பயனாளிக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் இறப்பு உதவித்தொகையும், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் 173 பயனாளிகளுக்கு தலா ரூ. 8 இலட்சம் மதிப்பில்;-

    காப்பீடு உதவித்தொகையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சம் மதிப்பில் மானியத்தொகையும், 1 பயனாளிக்கு ரூ. 4480 மதிப்பில் விசை தெளிப்பானும், 1 பயனாளிக்கு ரூ. 3 ஆயிரம் மதிப்பில் பண்ணை வேளாண் கருவிகளும், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் எனமொத்தம் 398 பயனாளிகளுக்கு ரூ.9,31,24,416 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவி களுக்கு மாவட்ட கலெக்டர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

    விழாவில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குநர்ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர்அர்ச்சணா, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.வ.யுரேகா, இணை இயக்குநர்(வேளாண்மை) சேகர், மாவட்ட ஆட்சித்த லைவர் அவர்களின் நேர்முக உதவியாளர்(பொது) பாலாஜி, மாவட்ட ஆட்சித்த லைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபால், முதன்மை கல்வி அலுவலர்ரேணுகா ,உதவி ஆணையர் (கலால்) நரேந்திரன் அவர்கள், மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல்;-

    கண்காணிப்பாளர்த ங்க வேல், மயிலாடுதுறை ஒன்றிய குழுத்தலைவர்காமாட்சி மூர்த்தி, காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் அவர்கள், மயிலாடுதுறை வட்டாட்சியர்.மகேந்திரன், மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×