search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மல்லையாபுரத்தில் உயர்அழுத்த மின்சாரத்தால் மின்சாதன பொருட்கள் பழுது
    X

    கோப்பு படம்

    மல்லையாபுரத்தில் உயர்அழுத்த மின்சாரத்தால் மின்சாதன பொருட்கள் பழுது

    • மல்லையாபுரத்தில் வேறு ஒரு மின்சார டிரான்ஸ்பார்மில் இருந்து தற்காலிகமாக வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுத்தனர்.
    • அதிக அளவு மின்சாரம் திடீரென வினியோகமான தால் வீடுகளில் பயன்படு த்திய விலை உயர்ந்த டிவிகள், பிரிட்ஜ்கள், பேன்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம் அடைந்தன.

    செம்பட்டி:

    செம்பட்டியை அடுத்த ஆத்தூர் அருகே மல்லையா புரம் கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு மல்லையாபுரம் அருகே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மில் இருந்து மின் வினியோகம் செய்ய ப்பட்டு வருகிறது. இந்நிலை யில் மாலை டிரான்ஸ்பார் பழுது ஏற்பட்டதால் அனைத்து வீடுகளுக்கும் மின் வினியோகம் தடைபட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் மல்லையா புரத்தில் வேறு ஒரு மின்சார டிரான்ஸ்பார்மில் இருந்து தற்காலிகமாக வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுத்த னர். அப்போது மல்லையா புரத்தின் புதிய இணைப்பு கொடுத்த டிரான்ஸ்பார்மில் இருந்து அதிக அளவு மின்சாரம் திடீரென வினியோகமான தால் வீடுகளில் பயன்படுத்திய விலை உயர்ந்த டிவிகள், பிரிட்ஜ்கள், பேன்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம் அடைந்தன. வீடு களில் டிவி ஓடிக்கொண்டி ருந்த போது புகை வெளி யாகி பழுது ஏற்பட்டது.

    குறிப்பாக, மல்லையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த, சுப்பையா, நாராயணன், ராதா, கணேசன், சக்திவேல், முத்துலட்சுமி, கருங்க ண்ணன் உள்ளிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது. இதனால் கிராம மக்களுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டு ள்ளது. மல்லையாபுரத்தில் இரவு 2 டிரான்ஸ்பார்மும் பழுது ஏற்பட்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நள்ளிரவு முதல் அக்கி ராமமே இருளின் மூழ்கியது. இதனால் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் ஆகியோர் பெரும் அவதிக்கு ள்ளானார்கள்.

    எனவே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய ஊழியர்கள் பழுத டைந்துள்ள டிரான்ஸ்பா ர்மை சரி செய்ய வேண்டு மென மல்லையாபுரம் கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு கிராமத்தில் ஒரே நேர த்தில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் உயரழுத்த மின்வினியோகத்தால் வீட்டு உபயோக பொருள்கள் சேதம் அடைந்துள்ள சம்ப வம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×