என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திண்டிவனத்தில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் - 3 பேர் கைது
  X

  புரோக்கராக செயல்பட்ட 2 பேரை படத்தில் காணலாம்,

  திண்டிவனத்தில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் - 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஏழை பெண்களை ஆசை வார்த்தை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது.
  • பரத் மற்றும் மகேந்திரன் இருவரும் கூட்டாக இணைந்து புரோக்கராக செயல்பட்டதும் தெரிய வந்தது.


  திண்டிவனம் ராஜா பேட்டை தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, திண்டிவனம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த கோவை மாவட்ட சேர்ந்த ஷர்மிளா பானு (38) உள்ளிட்ட 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். விசாரணையில், குடும்ப வறுமையில் உள்ள ஏழை பெண்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து வாடகை வீட்டை பிடித்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது.

  இவர்களுக்கு உடந்தையா க இருந்த புரோக்கர்கள் புதுவை மாநிலம் மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த பாவரதன் என்கின்ற பரத் (23) ஆரணி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (38), ஆகியோர் இருந்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 2 பெண்களையும் மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், ஷர்மிளா பானு, பரத் மற்றும் மகேந்திரன் இருவரும் கூட்டாக இணைந்து விபசாரம் நடத்தி வந்ததும், அதற்கு புரோக்கராக செயல்பட்டதும் தெரிய வந்தது. தொடர்ந்து காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Next Story
  ×