search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் சோழாபுரி அம்மன் கோவிலில் ஆகம விதிகளின் படி சீரமைப்பு பணிகள் - விரைவில் தொடங்க முடிவு
    X

    திருப்பூர் சோழாபுரி அம்மன் கோவிலில் ஆகம விதிகளின் படி சீரமைப்பு பணிகள் - விரைவில் தொடங்க முடிவு

    • ராகு, கேது தோஷம் நீங்குவதற்காக சிறப்பு பூஜை நடத்தி, அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
    • ஸ்தபதி யுவராஜ் குழுவினர் மற்றும் சிவநாதன் உள்பட கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் மிகவும் பழமை வாய்ந்த சோழாபுரி கோவில் உள்ளது. இந்த கோவிலை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளருமான க.செல்வராஜ் மற்றும் கோவில் நிர்வாகிகள் பராமரித்து வருகின்றனர்.

    ராகு, கேது தோஷத்திற்கு மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வரும் சோழாபுரி அம்மன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ராகு, கேது தோஷம் நீங்குவதற்காக சிறப்பு பூஜை நடத்தி, அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

    கடந்த மாதம் 19-ந்தேதி கோவிலில் ஆகமவிதிகளின்படி பிரசன்னம் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் கோவிலில் பல்வேறு திருப்பணிகளை செய்வதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ் அறிவுறுத்தலின்படி, எம்.எல்.ஏ. செல்வராஜின் மகன் திலக்ராஜ் தலைமையில் இந்த கோவிலில் மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள் குறித்த ஆலோசனை நடைபெற்றது.

    இதில் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோவிலின் ஓய்வு பெற்ற நம்பூதிரி பி.என்.கோவிந்தன் குழுவினர் மற்றும் திருப்பூர் தியாகிகுமரன் காலனி சுடலை மகாராஜா கோவிலின் பூசாரியும், பிரபல அருள்வாக்கு சித்தருமான சுரேஷ் சுவாமிகள் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டு, ஆகம விதிகளின்படி மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்கள்.

    இதன்படி கோவிலில் உள்ள ராகு, கேதுவை திசை மாற்றி அமைப்பது, துர்க்கையம்மன் தெய்வத்தை புதிதாக நிறுவுவது உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த திருப்பணிகளை விரைவில் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது. இதில் ஸ்தபதி யுவராஜ் குழுவினர் மற்றும் சிவநாதன் உள்பட கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×