என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாலை மலர் செய்தி எதிரொலியாக அரசு பள்ளி ரூ.3.54 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு
- வகுப்பறைக் கட்டடங்கள் தரமில்லாமல் கட்டப்பட்டதால் பழுதடைந்தது.
- ரூ.3,54,000 லட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் வகுப்பு கட்டிடங்கள் மற்றும் கழிவறைகளை சீரமைத்து கொடுத்துள்ளனர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் மாதேமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பாளையத்தானூர் பகுதியில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. அப்பகுதியில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 28 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளிக்கு இருபது வருடங்களுக்கு முன்பாக வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டன.
அப்பொழுது வகுப்பறைக் கட்டடங்கள் தரமில்லாமல் கட்டப்பட்டதால் பழுதடைந்தது. அதனை அடுத்து 2009-ம் ஆண்டு சீரமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு சீரமை க்கப்பட்டன.
இருப்பினும் சீரமைப்பு பணிகளும் சரிவர மேற்கொள்ள படாததால் பள்ளி மேற்கூரைகள் அவ்வப்போது போது உடைந்து விழுந்து வந்தன. மேலும் மழைக்காலங்களில் பள்ளி வகுப்பறையிலேயே மழைநீர் ஒழுகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாலை மலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை கவனித்த உடையவர் திருவடி அறக்கட்டளையினர் பள்ளியை சீரமைக்க முன்வந்து ரூ.3,54,000 லட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் வகுப்பு கட்டிடங்கள் மற்றும் கழிவறைகளை சீரமைத்து கொடுத்துள்ளனர்.
இதனை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மாண வர்கள் சார்பில் பள்ளியை சீரமைத்து கொடுத்த உடையவர் திருவடி அறக்க ட்டளைக்கும், செய்தியின் மூலம் பள்ளியின் நிலையை வெளிக்கொண்டு வந்த மாலை மலர் நாளிதழுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டனர்.






