search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிறந்த நாள், திருமண நாளை நினைவுகூறும் வகையில் மரக்கன்றுகள் நட வேண்டும் -கலெக்டர் அறிவுரை
    X

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவில் மாவட்ட கலெக்டர் சாந்தி மரக்கன்றுகளை நடவு செய்த போது எடுத்தபடம்.

    பிறந்த நாள், திருமண நாளை நினைவுகூறும் வகையில் மரக்கன்றுகள் நட வேண்டும் -கலெக்டர் அறிவுரை

    • அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு மஞ்ச ப்பைகளை வழங்கினார்.
    • மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவில் மாவட்ட கலெக்டர் சாந்தி மரக்கன்றுகளை நட்டு வைத்து, அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு மஞ்ச ப்பைகளை வழங்கினார்.

    தருமபுரி மாவட்டம் தமிழ்நாடு மாசுக்க ட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து துணிப்பைகளை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீதமாக மஞ்சப்பைகள் வழங்கப்பட்டது.

    தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஒரு சிறப்பு நிகழ்வாகவே எடுத்துக்கொண்டு வீட்டுக்கு ஒரு மரக்கன்று வைத்து வளர்க்க வேண்டும்.

    பொதுமக்கள் தங்கள் குடும்பங்களில் உள்ளவர்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கிய நாட்களை நினைவுகூறும் வகையில் கட்டாயம் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

    மரக்கன்றுகளை நடுவதோடு மட்டுமல்லாமல் நட்ட மரக்கன்றுகளை தண்ணீர் ஊற்றி வளர்த்து பாதுகாத்து பராமரிக்க வேண்டும். மக்களின் மனதில் இது ஆழமாக பதிய வேண்டும்.

    பல்வேறு வகையான மரங்கள் வளர்க்க வேண்டும். மக்கள் தங்கள் வீடுகளின் அருகில் உள்ள காலி இடங்களில் மரக்கன்றுகளை வைத்து வளர்க்க வேண்டும்.

    மேலும், மாவட்டத்தில் அதிகமாக பசுமை பரப்பு இருக்கின்றது காரணம் வனத்துறை அலுவ லர்கள், உள்ளாட்சி துறைகள், சுற்றுச்சூழல் துறை, உள்ளாட்சி அமைப்பு களினுடைய பிரதிநிதிகள், தன்னா ர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருடைய ஒத்து ழைப்போடு இந்த பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×