search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முல்லைபெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு
    X

    முல்லைபெரியாறு அணை (கோப்புபடம்)

    முல்லைபெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு

    • முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைக்கொண்டு 14707 ஏக்கர் இருபோக நெல்விவசாயம் செய்யப்படுகிறது.
    • கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

    கூடலூர்:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இன்னும் தொடங்காத நிலையிலும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைக்கொண்டு 14707 ஏக்கர் இருபோக நெல்விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த 1-ந்தேதி பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் விவசாய பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    ஆரம்பத்தில் 200 கனஅடி திறக்கப்பட்ட நிலையில் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 400 கனஅடியாக பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டது. தற்போது முல்லைபெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு 500 கனஅடியும், தேனி மாவட்ட குடிநீருக்காக 100 கனஅடியும் என 600 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 130.15 அடியாக உள்ளது. வரத்து 342 கனஅடி, நீர் இருப்பு 4732 மி.கனஅடி. கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

    வைகை அணை நீர்மட்டம் 55.61 அடியாக உள்ளது. வரத்து 232 கனஅடி, திறப்பு 869 கனஅடி, நீர் இருப்பு 2818 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.60 அடி, வரத்து 74 கனஅடி, இருப்பு 280.69 மி.கனஅடி.

    சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 84.62அடி, வரத்து 15 கனஅடி, திறப்பு 6 கனஅடி, இருப்பு 435.58 மி.கனஅடி.

    பெரியாறு 7.2, தேக்கடி 6.4, உத்தமபாளையம் 0.8, ஆண்டிபட்டி 2.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×