search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் -கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் -கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி, தொடங்கி வைத்தார்.
    • தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சி க்குட்பட்ட தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய ங்களுக்கு இடையிலான சேலம் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி, தொடங்கி வைத்தார்.

    பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    இந்த மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் Ball Badminton, Volley Ball, Foot Ball, Tennikoit, Basket Ball, Throw Ball போன்ற விளையாட்டுகளும் 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1500மீ, 4x100 Rellay, Long Jump, High Jump, Javelin Throw, Shot Put போன்ற தடகள போட்டிகளும் இடம் பெற்று வருகிறது.

    சேலம் மண்டலத்தில் உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களை சார்ந்த 10 தொழிற் பயிற்சி நிலையங்களிலிருந்து 350 மாணவர்களும், 150-க்கும் மேற்பட்ட மாணவிகளும் பங்கேற்றுள்ளனர்.

    போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் அன்றைய தினமே வழங்கப்படுகிறது. மண்டல விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில் நடைபெறவுள்ள மாநில விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

    போட்டி நடைபெறும் மூன்று நாட்களுக்கும் போட்டி யாளர்களுக்கு தங்கு மிடம், உணவு வசதி, கழிப்பறை வசதிகள் அனைத்தும் நல்ல முறையில் ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது. இது தவிர மருத்துவ வசதிகளும் காவல்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் தருமபுரி நகரமன்ற தலை வர் மா.லட்சுமி, சேலம் மண்டல பயிற்சி இணை இயக்குநர் (பொ) ராஜகோபாலன், தருமபுரி அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் முதல்வர் (பொ) டி.கே.சிவகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, மாணவ, மாணவியர்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×