search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேகமாக குறைந்து வரும் நீர்மட்டம் முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு
    X

    முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)

    வேகமாக குறைந்து வரும் நீர்மட்டம் முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

    • கேரளாவில் பெய்த தொடர் மழையால் முல்லை ப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.
    • நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து 285 கன அடியாக சரிந்துள்ளது.

    கூடலூர்:

    கேரளாவில் பெய்த தொடர் மழையால் முல்லை ப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அதனைத் தொட ர்ந்து பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    மேலும் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து 285 கன அடியாக சரிந்துள்ளது. இதனால் நீர்மட்டம் குறைந்து 140.85 அடியாக உள்ளது.

    இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அணையை கண்காணித்து வருகின்றனர். நேற்று தமிழக பகுதிக்கு 1867 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் நீர் திறப்பு 511 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கும் மதுரை மாநகர குடிநீருக்கும் 2569 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 1566 கன அடியாக குறைந்துள்ளது.

    71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 63.32 அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. அணைக்கு 80 கன அடிநீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.79 அடியாக உள்ளது. அணைக்கு 20 கன அடி நீர் வருகிறது. 27 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    Next Story
    ×