என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிணற்றில் பிணமாக கிடந்த பெண்ணை படத்தில் காணலாம்.
பெண் கிணற்றில் சடலமாக மீட்பு
- மூன்று நாட்களுக்கு முன்பாக வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை.
- கிணற்றுப் பகுதியில் சடலமாக இந்திராகாந்தி மிதந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தகரப்பட்டி கிராமத்தை சேர்ந்த இந்திரா காந்தி (வயது 52). இவரது கணவர் பெயர் காமராஜ். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இந்திராகாந்திக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை.
இது தொடர்பாக அவரது கணவர் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் அருகிலுள்ள கைவிடப்பட்ட விவசாய கிணற்றுப் பகுதியில் சடலமாக இந்திராகாந்தி மிதந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு நேரில் வந்த காவலர்கள் இந்திராகாந்தியின் உடலை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






