என் மலர்
உள்ளூர் செய்திகள்

போட்டியில் சாதனை:வெளிநாடு செல்லும் தருமபுரி அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
- மாநில அளவிலான போட்டியில் வானவில் மன்றம் சார்பில் தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ளார்.
- மே மாதம் வெளிநாடு செல்லும் இம்மாணவிக்கு ரூபாய் 15, ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருள்களை வழங்கினர்.
தருமபுரி
தருமபுரி மாவட்டம், கே.நடுஅள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளியில், 8-ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீதிவ்யா பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்பட்ட, மாநில அளவிலான போட்டியில் வானவில் மன்றம் சார்பில் தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிக்கு, தருமபுரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் கவுதமன், மாவட்ட பொறியாளர் அணியின் துணை அமைப்பாளர் விமலன், முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளர் சந்திர மோகன், பள்ளித் தலைமை ஆசிரியர் செந்தில், பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் பெரியண்ணன் மற்றும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், மே-2023 ஆம் மாதம் வெளிநாடு செல்லும் இம்மாணவிக்கு ரூபாய் 15, ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருள்களை வழங்கினர்.
Next Story






