என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் `அலப்பறை கிளப்புறோம் எதார்த்த நிகழ்ச்சி
    X

    எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் `அலப்பறை கிளப்புறோம்' எதார்த்த நிகழ்ச்சி

    • நடிகர் புகழ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
    • நிகழ்ச்சி பொழுதுபோக்கு, சிரிப்பு மற்றும் திறமைகளின் சங்கமமாக விளங்கியது.

    எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'அலப்பறை கிளப்பறோம்' என்ற தலைப்பில் எதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பிரபல தமிழ் நடிகரும் நகைச்சுவை நடிகருமான புகழ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியை அக்ஷிதா தொகுத்து வழங்கினார்.


    இந்த நிகழ்ச்சி பொழுதுபோக்கு, சிரிப்பு மற்றும் திறமைகளின் சங்கமமாக விளங்கியது. மாணவர்கள் தங்கள் பல்வேறு திறமைகளை ஆர்வமுடனும் உற்சாகத்துடனும் வெளிப்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் உற்சாகமான வேடிக்கையான விளையாட்டுகள் மேலும் மெருகூட்டின.

    இளைஞர்களின் வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு உணர்வுகளை மகிழ்ச்சியோடு வெளிப்படுத்தி ஒரு ரம்யமான சூழலை கல்லூரி வளாகத்தில் வெளிப்படுத்தியது.

    Next Story
    ×