search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன்அரிசி மற்றும் வாகனம்.

    போடி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்

    • மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவின்பேரில் பறக்கும்படை அலுவலர் தலைமையில் குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட 250 கிலோ ரேசன் அரிசியை மடக்கி பிடித்தனர். அந்த அரிசி கேரளாவுக்கு கடத்திச்செல்லப்பட்டது தெரியவந்தது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி, கம்பம், உத்தமபாளையம், கூடலூர் பகுதியிலிருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்துவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    அதிகாரிகள் ரோந்து சென்று மடக்கி பிடித்தபோதும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை. மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் பறக்கும்படை அலுவலர் முத்துக்குமார் தலைமையில் குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    போடி அருகே முந்தல் சோதனைச்சாவடியில் தணிக்கையில் ஈடுபட்டபோது ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட 250 கிலோ ரேசன் அரிசியை மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில் அந்த அரிசி கேரளாவுக்கு கடத்திச்செல்லப்பட்டது தெரியவந்தது.

    பிடிபட்ட அரிசியை உத்தமபாளையம் வாணிபகழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர். மேலும் நடவடிக்கை எடுக்க உணவு கடத்தல் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டரிடம் வாகனத்தை ஒப்படைத்தனர்.

    போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×