என் மலர்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை கலெக்டர் ஆபிசில் ரூ.2 லட்சம் மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.
முகாமில் உடல் உழைப்பிற்கு ஏற்ப மருத்துவர்களின் நேரடி ஆய்வுக்குப் பின்னர் மாற்றுத்திறனாளிகள் 323 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுரையின்படி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 83 மாற்றுத்திறனாளிகள் பெயர் பதிவும், 157 புதிய பயனாளிகளுக்கு பதிவும் மேற்கொள்ளப்பட்டது.
முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு தக்க செயல் திறன் கொண்ட செல்போன் -7, ரொலேட்டர்-2, காதுக்குப் பின்னால் அணியும் காதொலிக் கருவி -1, மொபட்-1, சக்கர நாற்காலி -3 ஆக மொத்தம் 14 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
முகாமில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் அருகே சாலையில் கிடந்த ரூ.25 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த வார்டு உறுப்பினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் வங்கி உள்ளது.
அதன் அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.25 ஆயிரத்தை பெருமூச்சி ஊராட்சி மன்ற 12-வது வார்டு உறுப்பினர் ஜாபர்ஷெரிப் அப்பணத்தை மீட்டு அரக்கோணம் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் முன்னிலையில் அரக்கோணம் டவுன் சப்&இன்ஸ்பெக்டர் முத்து விடம் ஒப்படைத்தார்.
ஜாபர்ஷெரிப்பை டி.எஸ்.பி. பொன்னாடை அணிவித்து புத்தகப் பரிசு வழங்கி பாராட்டினார்.
வாலாஜாவில் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் பிரம்மோற்சவ தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோற்சவ விழாவில் 8-ம் தேதி விக்னேஸ்வரர் மூஷிக வாகனம் 9-ம் தேதி அன்னவாகனம் 10-ம் தேதி சிம்மவாகனம் 11-ம் தேதி கற்பகவிருட்சம் காமதேனு வாகன சேவை, 12ம் தேரி நாக வாகனம், 13ம் தேதி திருகல்யாண ரிஷப வாகனம், 14ம் தேதி நேற்று யானை வாகனம் போன்ற வாகனங்கள் வீதி உலா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தேர்த்திருவிழானது இன்று தொடங்கியது. ஏகாம்பரநாதர் கோவில் தேரடியிலிருந்து பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து சென்றனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
வாலாஜா எம்.பி.டி சாலையில் தேர் நிறுத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணி அளவில் மீண்டும் தேர் புறப்பட்டு வாலாஜா பேருந்து நிலையம் வழியாக சோளிங்கர் ரோடு மஞ்சள் காமாலை மருந்து வழங்கும் வீதி வழியாக தேர் நிலையத்தை வந்தடைந்தது.
காவேரிப்பாக்கம் அருகே மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்கள் ஊர்வலம்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவ மாணவிகள் ஊர்வலம் சென்றனர்.
இதில் தொன்போஸ்கோ வேளாண்மை கல்லூரி மாணவிகள் மற்றும் அரசு உயர்நிலை பள்ளி மாணவர்களுடன் இணைந்து தமிழகத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடத்தினர்.
நெகிழிப் பைகளை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த மாணவ-மாணவிகள் வலியுறுத்தினர்.
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
அரக்கோணம்:
அரக்கோணம் கணேஷ் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). கூலி வேலை செய்து வந்தார்.
இவர் நண்பர்களுடன் கும்பினிபேட்டை அருகே மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மது போதையில் அவர்கள் வந்த பைக் சாவியை இருட்டில் தேடியுள்ளனர்.
சாவி கிடைக்காததால் நண்பர்கள் சென்ற போது ரமேஷ் அங்கு இல்லை இதனால் வீட்டிற்கு சென்று விட்டதாக நினைத்துக்கொண்டு சென்றனர்.
மீண்டும் நேற்று காலை பைக் சாவியை தேடி மது அருந்திய இடத்திற்கு வந்தனர்.
அப்போது அங்குள்ள கிணற்றின் அருகே ரமேஷின் செருப்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிணற்றில் இருந்து ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உக்ரைனில் இருந்து 2 மாணவர்கள் அரக்கோணம் திரும்பினர்.
அரக்கோணம்:
அரக்கோணத்தை சேர்ந்த பிரபாகரன்-வாணி தம்பதியரின் மகன் ஸ்ரீநாத். பாஸ்கர்- சித்ரா தம்பதியரின் மகன் மோனிஷ்கர் ஆகியோர் உக்ரைன் சுமி நகரில் இறுதியாண்டு மருத்துவம் படித்து வருகின்றனர்.
ரஷியா- உக்ரைன் போர்காரணமாக இருவரும் ஊர்திரும்பினர். ஊர்திரும்பியது குறித்து அரக்கோணம் வந்த மாணவர்கள் கூறுகையில் எங்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்த இந்திய பிரதமர்நரேந்திர மோடி, உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின், சுமி நகரில் எங்களுக்கு உதவிய தன்னார்வளர்களுக்கும் மற்றும் போலந்து அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.
இதனையடுத்து ஸ்ரீநாத்தின் தந்தை பிரபாகரன் கூறுகையில், எனது மகன் சுமி நகரில் இருந்து எங்களை தொடர்பு கொண்டு - பேசிய போது இங்கு குண்டுவீச்சு, ஏவுகணைதாக்குதல் சத்தம் கேட்கிறது. அபாய ஒலி எழுப்பும்போது பதுங்கு குழிகளுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
உக்ரைனில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தபிரதமர்நரேந்திர மோடிக்கும், தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்மற்றும் மீட்பு பணிகளில் பணியாற்றியவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் மாரடைப்பால் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
அரக்கோணம்:
சென்னை சென்டரல் ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெங்களுருவை சேர்ந்த பாபு (வயது
60). என்பவர் அவரது மனைவியுடன் பயணம் செய்தார்.
ரெயில் அரக்கோணம் அருகே வந்த போது திடிரென பாபுவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரும் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இறங்கினர்.
நடைமேடையில் அவரது மனைவி மற்றும் பொதுமக்கள் சிலரும் முதலுதவி அளித்தனர்.
இதற்கிடையே அங்கிருந் தவர்கள் உதவியுடன் பாபுவை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி படைதள 30-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.
அரக்கோணம்:
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளியின் 30-ம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், “கடல் கண்காணிப்பு பணியில் கடற்படை விமானப்பிரிவின் சுயசார்பு” குறித்து 3 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளியில் நீண்ட தூர கடல்சார் உளவு விமானப் படை மற்றும் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளி ஆகியன இயங்கி வருகின்றன.
இந்த விமான நிலையம் அதிநவீன போயிங் பி81, சீ கார்டியன் ஹை ஆல்டி டியூட் லாங் ரேஞ்ச் தொலைதூர பைலட்டட் விமானம் மற்றும் சேடக் ஹெலிகாப்டர்களை இயக்கும் தனிச்சிறப்பைக் கொண்டுள்ளதை குறிப்பிட்டனர்.
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் ‘கடல்சார் கண்காணிப்பில் 3 தசாப்தங்களின் சிறப்பு’ என்ற சிறப்பு அஞ்சல் அட்டையை இந்திய நேவல் அகாடெமியின் கமாண்டன்ட் வைஸ் அட்மிரல் புனீத் குமார் பாஹல் வெளியிட்டார்.
அப்போது இந்திய அஞ்சல் துறையின் சென்னை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் உடன் இருந்தனர்.
இந்திய அரசின் ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படை விமான பிரிவு சுய சார்பை அடைய பொது-தனியார் கூட்டாண்மை அவசியம்.கடல்சார் கண்காணிப்பு விமானங்களுக்கான பராமரிப்பு, பழுது பார்ப்பு,
மறுசீரமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான வழிகள் உள்ளிட்ட 15 கட்டுரைகள் இந்த கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்டன.
காவேரிப்பாக்கம் அருகே திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதிவிழா நடந்தது.
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த அய்யம்பேட்டை திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 8-ந்தேதி அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
தொடர்ந்து கீசகன் வதம் , கிருஷ் ணன் தூது, அரவாண் மோகினி திருமணம் உள்ளிட்ட நிகழ்ச் சிகள் நடைபெற்றன. நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி விழாவும் நடைபெற்றது.
விழாவில் அம்மனுக்கு காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீமித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இதில் சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்ததிரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
லட்சுமி நரசிம்மர் கோவில் மலைப்பகுதிகளில் நடப்பட்ட மரக்கன்றுகள் தண்ணீரின்றி கருகியது.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா , கர்நாடகா மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து பெரிய மலையில் உள்ள ஸ்ரீயோக லட்சுமி நரசிம்ம சுவாமி, சிறிய மலை யில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.
மலைக் கோவில்கள் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் மூலம் பல்வேறு வகையான சுமார் 150-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கோவில் செயல் அலுவலர் ஜெயா மற்றும் பணியாளர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
ஆனால் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி முறையாக பராமரிக்கவில்லை.
இதனால் பல மரக்கன்றுகள் தண்ணீர் இன்றி கருகி விட்டன . ஓரிரு இடங்களில் மட்டுமே மரக்கன்றுகள் உள்ளன.
இந்த மரக் கன்றுகளையாவது கோவில் நிர்வாகம் தண்ணீர் ஊற்றி முறை யாக பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பள்ளூர், தக்கோலம் பகுதியில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம்:
அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட துணை நிலையங்களின் மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.-
பள்ளூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளூர், கம்மாவார்பாளையம், கோவிந்தவாடி, அகரம், திருமால்பூர், கணபதிபுரம், சேந்தமங்கலம், சயனபுரம், நெமிலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
தக்கோலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தக்கோலம், சிஐஎஸ்எப், அரிகிலபாடி, சேந்தமங்கலம், புதுகேசாவரம்,அனந்தபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
புன்னை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட புன்னை, காட்டுப்பாக்கம், மகேந்திரவாடி, மேல்களத்தூர், எலத்தூர், கீழ்வெங்கட்டாபுரம், வேட்டாங்குளம், மேலேரி,சிறுணமல்லி, சம்பந்தராயன்பேட்டை மற்றும் சுற்றியுள்ள அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
இவ்வாறு கோட்ட செயற் பொறியாளர் எஸ். கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாலாஜாபேட்டையில் தென்னிந்திய இயற்கை உணவு பொருட்கள் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது.
வாலாஜா:
வாலாஜா எம்.பி.டி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென்னிந்திய இயற்கை மற்றும் உணவுப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களை கண்டறிந்து அவர்களை தேர்வு செய்து அவர்களின் சுய தொழிலுக்கான தொழில் தன்மை இட வசதி, மின் வசதி,
தண்ணீர் வசதி, தொழிலுக்கான ஆட்களை அமர்த்தும் வசதி போன்ற தொழிலுக்கான அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து தொழிலுக்கான தொழில் கூடம் இயந்திர தளவாடங்கள் மின்சாதன உபகரணங்கள் தொழிலுக்கான மூலப் பொருட்கள் கொள்முதல் செய்தல் குரு சிறு தொழிலுக்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொண்டு ஒரு ஒன்றியத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து தொழில்களை உருவாக்குதல் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.






