என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    அரக்கோணம் அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் மரணம் குறித்து போலீசார்– விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நகரி குப்பத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி  (வயது54). என்பவர் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். 

    இவர் சம்பவத்தன்று இரவு சாப்பாடு சாப்பிட்ட பின் தூங்கினார். அப்போது திடிரென அதிகாலையில் நெஞ்சு வலிபதாக உடன் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். 

    உடனே அவரை மீட்டு பூந்தமல்லி அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    வந்தவாசி அருகே அரசு பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் அருகே  மேல் புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசினர் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் படிக்கும் 48 மாணவர்களை சுற்றுலா செல்வதற்கு தனியார் பஸ்சில் ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர். மாணவர்களை செஞ்சி கோட்டை மற்றும் புதுச்சேரிக்கு சென்றுவிட்டு வந்தவாசி வழியாக வீடு திரும்பி க்கொண்டிருந்தனர்.

    வந்தவாசி அடுத்த தெள்ளூர் கிராமத்தில் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    இதனால் பள்ளி மாணவர்கள் அலறி துடித்தனர். 

    அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று மாணவர்களை மீட்டு அங்குள்ள இடத்தில் அமர வைத்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக 48  பள்ளி மாணவர்கள் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

    வந்தவாசி வடக்கு போலீஸ் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் மற்றும் காவல்துறை உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் கவிழ்ந்து கிடந்த பஸ்சை மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட அதே பஸ்சில் மாணவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
    சோளிங்கரில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா வீதி உலா வந்த கோவில் தேர் விமானம் உடைந்ததில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
    சோளிங்கர்:

    சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. பிரம்மோற்சவம் தொடங்கி 5-ம் நாளான நேற்று பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    மங்கல வாத்தியங்களுடன் சுவாமி கோவில் பிரகாரத்தில் 3 முறை வலம் வந்து ஊஞ்சல் சேவை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டு ஹேமகோடி விமானத்தில் எழுந்தருளி காட்சி தந்தார். 

    நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீடுதோறும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

    மாடவீதி உலா நிறைவுப்பெற்று தேர் சன்னதிக்கு திரும்பியது. அப்போது அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகில் கேபிள் ஒயரில் ஹேமகோடி விமானம் மாட்டிக் கொண்டு வாகனம் உடைந்து கீழே விழுந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் ஒருவர் காயமடைந்தார்.

    கோவில் உதவி ஆணையர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து கேட்டறிந்தார்.அப்போது அய்யங்கார்கள் ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவில் நிர்வாகம் எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் இந்த விபத்துக்கு காரணம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்தப் விபத்துக்கு முழு பொறுப்பு கோவில் நிர்வாகம் மட்டுமே என்று அய்யங்கார்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் சுவாமி கோவில் பிரகாரத்தில் கொண்டுவந்தனர். பின்னர் பரிகார பூஜை செய்யப்பட்டது.
    நெமிலி பகுதியில் பகுதி நேர ரேசன் கடை அமைக்ககோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனார்.
    நெமிலி, 

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம், சிறுணமல்லி, திருமால்பூர், மகேந்திரவாடி ஆகிய கிராமங்களின் ஆதிதிராவிடர் காலனி பகுதிகளில், புதியதாக பகுதிநேர நியாய விலைக்கடைகளை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் நெமிலி ஒன்றியகுழு தலைவர் பெ.வடிவேலு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்ஆர்.காந்திமேற்கண்ட 4  கிராமங்களில், பகுதிநேர ரேசன் கடைகளை அமைப்பதற்கான உத்தரவினை அளிக்க, ராணிப்பேட்டை கலெக்டருக்கு கோரிக்கை மனுவினை, ஒன்றிய குழு தலைவர் பெ.வடிவேலு கலெக்டர் பாஸ்கரபாண்டியனை சந்தித்து மனு வைழங்கினார்.

    இதில் சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவர.பவானி வடிவேலு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், அப்துல் ரஹ்மான், கிளை செயலாளர், தினேஷ் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 72 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
    ராணிப்பேட்டை,

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டத்துக்கு உட்பட்ட கல்மேல்குப்பம் இஸ்லாமியர்கள் குடியிருப்பு பகுதியில் 16 வயது நிரம்பிய சிறுமிக்கும், 25 வயது ஆணுக்கும் நேற்று திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. 

    குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
    இதுகுறித்து சைல்ட் லைன் 1098 என்ற எண்ணுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்பேரில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து, திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற இடத்துக்கு சென்ற கலெக்டர் பாஸ்கர பாண்டியன், குழந்தை திருமணம் குறித்தும், திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவர்களுக்கு விளக்கினார்.

    18 வயது வரை சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யக்கூடாது என்றும் சிறுமியை கல்வி நிலையத்தில் சேர்க்கவும் பெற்றோரிடம் அதிகாரிகள் எழுதி வாங்கிக்கொண்டனர்.

    மேலும், 18 வயது பூர்த்தியடையாத யாருக்கும் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று ஜமாத் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கலெக்டரிடம் அவர்கள் தெரிவித்தனர். அப்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    72 திருமணங்கள் நிறுத்தம் ராணிப்பேட்டை மாவட்ட சைல்டு லைன் 1098 அழைப்பின் மூலம் கடந்த 2020 ஏப்ரல் முதல் 2022-ம் ஆண்டு ஏப்ரல் வரை காலகட்டத்தில் 72 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில், வாலாஜா-8, ஆற்காடு-10, திமிரி -10, சோளிங்கர்-26, அரக்கோணம்-12, நெமிலி-4, காவேரிப்பாக்கம்-2 என்பது குறிப்பிடத்தக்கது.
    கலவை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறித்து இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அரசு மருத்துவம னையில்  ராணிப்பேட்டை மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் லட்சுமணன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது உள் நோயாளிகள், வெளி நோயா ளிகள் வருகை பதிவேடுகளை பார்வையிட்டார்.

    தீய ணைப்பு பைப்புகள் எவ்வாறு செயல்படுகிறது என ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனைக்கு தேவையான டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

    மேலும் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும், தேவையான மருந்துகள் , பணியா ளர்கள் இருக்கிறார்களா என கேட்டறிந்தார்.

    மருத்துவ அலுவலர் டாக்டர் வெண்ணிலா, உதவி எழுத் தர் சக்திவேல் மற்றும் மருந்தாளுனர், செவிலியர்கள், தீயணைப்பு துறையினர் உடன் இருந்தனர் .
    பாணாவரம் அருகே திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த வள் ளுவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 25) விவசாய கூலிதொழிலாளி. 

    இவருக்கும் பாணாவரம் அடுத்த ரங்காபுரம் கிராமத்தை சேர்ந்த உமாபதி என்பவரின் மகள் சினேகா (22) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த வாரம் சினேகா தனது தாய் வீட்டுக்கு சென்றுவருவதாக கூறி சென்றுள்ளார். 

    அங்கு யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்ததாக கூறப்ப டுகிறது. நேற்று முன்தினம் மாலை சினேகா வீட்டைவிட்டு வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்தநிலையில் அங்குள்ள விவசாய நிலத்தில் உள்ள வேப்பமரத்தில் சினேகா தூக்கில் தொங்கினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாணாவரம் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணமாகி 7 மாதமே ஆவதால் இதுகுறித்து ராணிப் பேட்டை வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி , அரக்கோ ணம் துணைபோலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் ஆகி யோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் இளைஞர்களுக்கான கலை போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.
    ராணிப்பேட்டை,

    கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு குரலிசை, கருவி இசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய பிரிவுகளில் மாவட்ட , மாநில அளவிலான கலை போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.

    கலை போட்டிகள் குரல் இசைப் போட்டி மற்றும் கருவி இசைகளான நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டு வாத்தியம், மாண்டலின், கிதார், ஆர்மோனியம், கீபோர்டு, சாக்சபோன், கிளாரினெட் போன்ற கருவி இசை போட்டியிலும், வர்ணங்கள் தமிழ் பாடல்கள் இசைக்கும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம். தாளக் கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் சில தளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

    பரதநாட்டியத்தில் வர்ணம் மற்றும் தமிழ் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம். கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கைச் சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலி ஆட்டம், தப்பாட்டம், மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். இப்போட்டியில் குழுவாக பங்கு பெற அனுமதி இல்லை.தனிநபராக அதிகபட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சியை நடத்திட அனுமதிக்கப்படுவார்கள்.

    ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவியத் தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர் வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை பங்கேற்பாளர்கள் கொண்டு வர வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரைய படவேண்டும். அதிகபட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள்.

    மாவட்ட போட்டியில் முதலிடம் பெறுவோர் மாநில அளவிலான போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டிகளில் பங்கு பெற விரும்பும் இளைஞர்கள் வருகிற 10-ந் தேதிக்குள் மண்டல உதவி இயக்குனர், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம் -631502 என்ற முகவரிக்கு தங்களது பெயர், பிறந்தநாள், முகவரி, செல்போன் எண், பங்குபெற விரும்பும் கலைப்பிரிவு ஆகிய விவரங்களை அனுப்பலாம். 

    9150085001 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ் அப்பிலும் அனுப்பலாம். வாய்ப்பினை கலைத்திறன் மிக்க ராணிப்பேட்டை மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
    ராணிப்பேட்டை நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை 11-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும் என நகராட்சி ஆணையாளர் எச்சரித்துள்ளார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை 11-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் தெரிவித்தார். 

    இதுகுறித்து ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது:-

    ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் தெரு மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து பங்க், ஜெனரேட்டர்கள், வாகனங்கள் பழுது பார்த்தல், டீக்கடை மேடை, தள்ளு வண்டிகள், அடுப்புகள் என பல்வகைப்பட்ட தற்காலிக/நிரந்தர கடைகள் கட்டப்பட்டு வருகிறது. 

    மழைநீர் வடிகால்வாய்களின் மீது மேடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகளுக்கு மிகுந்த இடையூறும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. 

    தெரு, சாலைகள் மற்றும் கால்வாய்கள் மீது ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் வரும் 11ம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து இந்த தற்காலிக நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 

    அவ்வாறு இல்லையெனில் நகராட்சி பணியாளர்களைக் கொண்டு மேற்படி தற்காலிக நிரந்தர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதுடன் மேற்படி செலவுத் தொகை தங்களிடமிருந்து வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

    அதேபோல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிறு குறு கடைகள் வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருக்கவோ அல்லது தனி நபர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

    ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால் விற்பனையாளர்களுக்கு ரூ.1000 முதல் 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி குடிநீர் இணைப்பு பெற்றுள்ள வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் நகராட்சி குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் இணைத்து தண்ணீர் உறிஞ்சினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும்.

    மேலும் நகராட்சி பணியாளர்கள் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் குப்பைகளை சேகரிக்க வரும்போது மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். 

    கலெக்டர் அவர்களின் வழிகாட்டுதலின் படி ராணிப்பேட்டை நகராட்சியை பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்றிட ராணிப்பேட்டை நகராட்சி மிகவும் சிரத்தை மேற்கொண்டு வருகிறது இதற்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் தெரிவித்தார்.
    ராணிப்பேட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்திட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கடைகளுக்கு சென்று பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி அபராதம் விதித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 

    இந்நிலையில் நேற்று ராணிப்பேட்டை நகராட்சி மீன் மார்க்கெட் காந்தி ரோட்டில் உள்ள வணிக விற்பனை கடைகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

    அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்து பொதுமக்களுக்கும் மற்ற சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்து வருவதை கடையில் சென்று பொருட்கள் இருந்ததை பார்த்து அனைத்து பொருட்களையும் கைப்பற்றினார். 

    அதில் சுமார் 1.5டன் பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. விற்பனை செய்த கடைக்காரருக்கு அபராதம் விதிப்பதை தவிர்த்து துணி மஞ்சப்பை 2000 எண்ணிக்கையில் வாங்கி நகராட்சி அலுவலகத்தில் வழங்குமாறு கடை உரிமையாளருக்கு உத்தரவிட்டார். இதனை விரைவாக வாங்கி தருவதாக கடைக்காரர் உறுதி அளித்தார்.

    தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ய போவது இல்லை எனவும் கடைக்காரர் தெரிவித்தார்.மேலும் இங்குள்ள கடைகளில் கண்காணிக்கவும் மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களில் அடைத்து விற்பனை செய்யும் கடையினை சீல் வைக்கவும் நகராட்சி ஆணையாளர் ஏகராஜிடம் கலெக்டர் தெரிவித்தார்.
    ராணிப்பேட்டையில் இருந்து 9 புதிய வழித்தடத்தில் அரசு பஸ்கள் போக்குவரத்தை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்திலிருந்து பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு 9 புதிய வழித்தட மற்றும் தடை நீட்டிப்பு செய்யப்படும் பஸ்களை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலூர் மண்டல பொது மேலாளர் நடராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புதிய வழித்தட பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் அனைத்து துறைகளிலும் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வரும் மக்களின் அரசாக செயல்பட்டு வருகிறது. 

    அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த புதிய வழித்தடம் மற்றும் வழிபட நீட்டிப்பு பஸ் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. மக்கள் கேட்டவுடனே அதனை ஆராய்ந்து அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

    மக்களின் கோரிக்கைகள் நிறைவேற நியாயமான கோரிக்கைகளை வைக்க வேண்டும். அப்போதுதான் கோரிக்கைகள் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு மக்கள் பயன்பெறுவார்கள். 

    தலங்கை முதல் ஆற்காடு வரை புதிய பஸ் வழித்தடம் வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.அதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் காந்தி பேசினார். 

    இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி பேரூந்து பாகாலா - சென்னை, வாலாஜா - பெங்களூர், ஆற்காடு- கோவிந்தசேரி குப்பம், ஆற்காடு - சீயாம்பாடி, ஆற்காடு- மேல்வல்லம், சோளிங்கர் - நெமிலி, ஆற்காடு-சோளிங்கர், ஆற்காடு- துர்கம், அரக்கோணம் - சோளிங்கர் வழி பரவத்தூர் ஆகிய புதிய வழித்தட பஸ்கள் இயக்கப்படுகிறது. 

    நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் ஹரினி, ஒன்றிக்குழு தலைவர் வெங்கட்ரமணன், நகரமன்ற துணை தலைவர்கள் ரமேஷ்கர்ணா, கமலராகவன், தமிழ்நாடு போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள் ரமேஷ், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

    முடிவில் தமிழ்நாடு போக்குவரத்து கழக துணை மேலாளர் பொண்ணு பாண்டி நன்றி கூறினார்.
    வாலாஜாவில் ரூ.1.30கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டையும், நிறைவுற்ற பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தொடக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். 

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் மாணவிகளுக்கான சுகாதார வளாகம் கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது. வள்ளுவம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது. மொத்தம் ரூ.1.30கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    ×