என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொட்டும் மழையிலும் தூய்மை பணி செய்த ஊழியர்கள்.
கொட்டும் மழையிலும் தூய்மை பணி செய்த ஊழியர்கள்
- மழையில் நனைந்து கொண்டு குப்பைகளை அள்ளினர்
- பொதுமக்கள் பாராட்டு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் நள்ளிரவில் இருந்து தொடரும் மழை பெய்து வந்தது.
இதனால் இன்று காலையில் இருந்து இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்க ப்பட்டது. நிலைமையை உணர்ந்த கலெக்டர் வளர்மதி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார்.
அரக்கோணத்தில் தொடர் மழை பெய்து வந்தாலும் அரக்கோணம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலையில் ஓரங்களில் இருக்கும் குப்பை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
நிலையை கருத்தில் கொள்ளாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்தார். மழையை காரணம் காட்டி செய்யத் தவறாமல் அதனை வழக்கம் போல் மழையில் நனைந்து கொண்டு குப்பைகளை அள்ளினர். அதனை அப்புறப்படுத்தி தள்ளு வண்டியில் எடுத்து சென்றனர்.
இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களின் ஓயாத பணியை கண்டு நெகிழ்ந்தனர். கொட்டும் மழையிலும் தங்கள் உடலை கருத்தில் கொள்ளாமல் பொதுமக்களுக்காக இதில் ஆற்றும் பணியை பாராட்டினர்.






