என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாறுமாறாக ஓடிய பஸ்
- 5 பேர் படுகாயம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கலவை:
காஞ்சிபுரத்திலிருந்து நேற்று மாலை கலவை நோக்கி அரசு பஸ் பயணிகளுடன் புறப்பட்டது.
இந்த பஸ்சில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மேல் நந்தியம்பாடியைச் சேர்ந்த சாம்பசிவம் (வயது 47) டிரைவர் மற்றும் வடமன ப்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (48) கண்டக்டராக பணியாற்றினார்.
கலவை அடுத்த மேச்சேரி அருகே இரவு 8 மணி அளவில் வரும்போது திடீரென பஸ் கியர் பாக்ஸ் உடைந்தது.
இதனால் நிலை தடுமாறிய அரசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மீது மோதியது.
புளிய மரம் முறிந்து விழுந்தது. தொடர்ந்து அந்த பஸ் அங்குள்ள மின் கம்பத்தின் மீது மோதியது. அதைத்தொடர்ந்து இறுதியாக அருகில் இருந்த காம்பவுண்ட் சுவர் மீது மோதி நின்றது.
இந்த விபத்தால் பஸ்சின் முன்புறம் முழுவதும் நொறுங்கி சேதமானது. இதில் டிரைவர் சாம்பசிவம் மற்றும் பஸ் பயணிகள் கலவை அடுத்த அல்லாளச்சேரியைச் சேர்ந்த பச்சையப்பன் மனைவி குப்பு( 60) மற்றும் கலவை அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன்(68) கலவையான் பேட்டையை சேர்ந்த பச்சையப்பன் (60)அகரம் மேட்டு தெருவை சேர்ந்த தயாளன்( 62)ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கலவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் டிரைவர் சாம்பசிவம், குப்பு, முருகேசன் ஆகிய 3 பேரும் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






