என் மலர்
உள்ளூர் செய்திகள்

வருகிற 12-ந்தேதி பள்ளி, கல்லூரிகள் செயல்படும்
- ஆடி கிருத்திகை விழாவை யொட்டி இன்று ஒரு நாள் விடுமுறை
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆடி கிருத்திகை விழாவை யொட்டி மாவட்டத்தில் உள்ள ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோவில் மற்றும் திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோவில் மற்றும் இதர பகுதியில் உள்ள முருகன் கோவில்களுக்கு பக்தர்கள், பொதுமக்கள் அதிகளவில் காவடி எடுத்து பஸ்களில் சென்று வருவார்கள்.
இதனால் பஸ்களை பயன்படுத்தி பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு சிரமம் ஏற்படும். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) அன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Next Story






