என் மலர்
உள்ளூர் செய்திகள்
அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்
- கொடி நாள் நிதி வசூல் இலக்கை எட்ட கலெக்டர் அறிவுறுத்தல்
- ரூ. 1 கோடியே 51 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் கொடிநாள் வசூல் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி பேசியதாவது:- இந்திய ராணுவத்தில் பணியாற்றும் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களை சேர்ந்தவர்களுக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் முன்னாள் படைவீரர் கொடிநாள் நிதிவசூல் செய்யப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு நிதி வசூல் தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு தமிழக அரசால் ரூ. 1 கோடியே 51 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை ரூ.41 லட்சம் எட்டப்பட்டுள்ளது,
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அந்தந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலக்கை ஒரு வார காலத்திற்குள் எய்தி படைவீரர் கொடிநாள் நிதி வசூல் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குனர் , லோகநாயகி, முன்னாள் படை வீரர் நலத்துறை உதவி இயக்குனர் ஞானசேகர் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.