என் மலர்
உள்ளூர் செய்திகள்

சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் வடதமிழக மாநில செயற்குழு கூட்டம்
- நூற்றாண்டு விழா குறித்து ஆலோசனை
- 28 மாவட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்
ராணிப்பேட்டை:
சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் வடதமிழக மாநில செயற்குழு கூட்டம் ராணிப்பேட்டை சிப்காட் ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவிலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வடதமிழக மாநில செயல் தலைவரும் குருசாமியுமான ஜெயசந்திரன் தலைமையில் நடந்தது.
மாநில பொது செயலாளர் ஜெயராமன், மாநில செயலாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் தினேஷ் வரவேற்றார். கூட்டத்தில் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தென் பாரத தலைவர் துரை சங்கர்ஜி பங்கேற்று ஹரிவராசனம் நூற்றாண்டு விழா குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
கூட்டத்தில் தமிழகத்தில் 1.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், 2.ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், கிருஷ்ணகிரி, தருமபுரி, 3.ஈரோடு, சேலம், நாமக்கல், 4.கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மண்டலங்களில் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா நடத்துவது, ஹரிவராசனம் அய்யப்ப தர்ம பிரசார யாத்திரையை அனைத்து ஊராட்சிகள், நகரம், பேரூராட்சி, மாநகர வட்டங்களில் கொண்டு சென்று சமாஜத்தின் யோகங்கள் தொடங்குவது என முடிவு செய்தனர்.
இந்த கூட்டத்தில் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தை சேர்ந்த 28 மாவட்ட தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பழனி நன்றி கூறினார்.






