search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ரூ.3.90 கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனை
    X

    ராணிப்பேட்டை சந்தயைில் விற்பனைக்கு குவிந்த செம்மறி ஆடுகள்.

    பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ரூ.3.90 கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனை

    • சிறப்பு ஆட்டுச் சந்தை நடந்தது
    • வெளி மாநிலங்களில் இருந்தும் மாடுகள் கொண்டு வரப்பட்டது

    ராணிப்பேட்டை

    ராணிப்பேட்டையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை நடந்தது.

    இதில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு அதிகளவில் கொண்டுவரப்பட்டன.

    வெள்ளாடுகள் அதிகப்பட்சமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று ஒரு நாள் மட்டும் இந்த சிறப்பு ஆட்டுச் சந்தையில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    அதேபோல் வேலூரை அடுத்த பொய்கை மாட்டு சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடக்கும். சுற்றுவட்டார பகுதிகளில் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    அதன்படி நேற்று நடந்த மாட்டு சந்தையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தை விட ஏராளமான மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

    அதன்படி கறவை மாடுகள் அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையிலும், எருது மாடுகள் ரூ.60 ஆயிரம் வரையிலும் மற்றும் எருமை மாடுகள் ரூ.50 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று ஒரு நாள் மட்டும் பொய்கை வார சந்தையில், அதிக அளவில் ரூ.1.90 கோடிக்கு வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×